Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

படுக்கையறையில் மனைவிக்கு பிடித்தவாறு நடந்துகொள்ள விரும்புகிறீர்களா..?

படுக்கையறையில் மனைவிக்கு பிடித்தவாறு நடந்துகொள்ள விரும்புகிறீர்களா..?

25 ஆவணி 2021 புதன் 15:29 | பார்வைகள் : 15189


 நம் நாட்டை பொறுத்த வரை செக்ஸ் தொடரான விஷயங்களை விவாதிப்பது, இது தொடர்பாக பேசி கொள்வது தவறான விஷயங்களாக பார்க்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பலர் பாலியல் உடல்நலப் பிரச்சனைகளை எதிர் கொண்டாலும் வெளியே பகிர்ந்து கொள்ள முடியாமல் அவஸ்தைப்படுகிறார்கள். 

 
மேலும் பாலியல் தொடர்பான சந்தேகங்களை தீர்த்து கொள்ள ஆதாரமற்ற மற்றும் சரி பார்க்கப்படாத தகவல்களை கொண்ட ஆன்லைன் வெப்சைட்களை நாடி செல்கிறார்கள். இது தவிர தங்களது நண்பர்கள் வழங்கும் அறிவியலற்ற ஆலோசனைகளை பின்பற்றுகிறார்கள்.
 
ஆணாதிக்க மனப்பான்மையை செக்ஸிலும் கொண்டு வருவது பல சங்கடங்களை குடும்ப உறவில் ஏற்படுத்துகிறது. நம் நாட்டில் பெண்களின் விருப்பங்கள் அல்லது ஆசைகள் சமூகம் மற்றும் வேலை செய்யும் இடங்களில் கருத்தில் எடுத்து கொள்ளப்படாதது போல பெரும்பாலானோரின் படுக்கையறைகளிலும் நடக்கின்றன. படுக்கையறை இன்பம் என்பது ஆணுக்கு மட்டுமே சொந்தமானதல்ல, உறவில் ஈடுபடும் பெண்ணின் தேவைகளும் இதில் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற செயல்பாடு மிக அரிதாகவே காணப்படுகிறது.
 
இப்போது வரை பெரும்பாலான ஆண்கள் உணராதது ஒரு விஷயம் என்னவென்றால் உடலுறவில் ஈடுபடும் போது பெண்களின் பாலியல் தேவைகளும் சமமாக பூர்த்தி செய்யப்பட்டால், அவர்கள் பல மடங்கு இன்பத்தை திருப்பி தருவார்கள் என்பது தான். எனவே நீங்கள் ஒரு சிறப்பான பாலுறவு வாழ்க்கையை அனுபவிக்க விரும்பினால், உங்கள் மனைவி படுக்கையில் என்ன விரும்புகிறார் என்பதை கண்டுபிடிப்பதே இதற்கான முதல்படி.
 
பார்ட்னரின் விருப்பம்: இனிமையான பாலுறவுக்கு முக்கிய தடையாக முதலில் இருப்பது சுயநலம். உங்களுக்கு எவ்வளவு இன்பம் கிடைக்க வேண்டும் என்று மட்டுமே கணக்கு போடாமல், உங்கள் மனைவியின் விருப்பத்திற்கும் இடமளிக்க வேண்டும். துணை எது மாதிரியான இன்பங்களை விரும்புகிறார் என்பது பற்றி அவரிடம் வெளிப்படையாக கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். பாலுறவில் அவருக்கான கற்பனைகள் என்ன, அதை வெளிப்படுத்த தடையாக எது இருக்கிறது என்பது குறித்தெல்லாம் பேசி அவரை தெளிவடைய செய்வது அவசியம்.
 
 
நெருக்கம் இல்லாத உடலுறவு ஒருபோதும் இன்பமாக இருக்காது. துணையை உற்சாகப்படுத்தும் செக்ஸ் பொஷிஷன்கள் எதாவது இருக்கிறதா என்பது பற்றியும் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஆண்களை ஒப்பிடும் போது பெண்களுக்கு பல வகையான பாலியல் புணர்ச்சிகள் இருக்கின்றன. பெண்களின் பாலியல் விருப்பத்திற்கு ஆண்கள் ஒத்து போவது என்பது, அவர்களது பாலியல் உணர்ச்சியை திருப்திபடுத்துவது.
 
அனைத்து வகை புணர்ச்சியிலும் கவனம்: பெரும்பாலும், ஆண்கள் தங்கள் சூட்சுமத்தை கிளிட்டரல் புணர்ச்சியுடன் தொடர்புபடுத்தி கொள்கிறார்கள். தங்கள் துணைக்கு இத்தகைய புணர்ச்சியை தர முடியாவிட்டால் தங்களை திறமையற்றவர் என நினைத்து கொள்கிறார்கள். பெண்களுக்கு இது போன்ற சிக்கல்கள் இல்லை. ஒரு பெண்ணின் உடலில் 30-க்கும் மேற்பட்ட ஈரோஜெனஸ் மண்டலங்கள் (erogenous zones) இருப்பதாகவும், 11-க்கும் மேற்பட்ட புணர்ச்சி வகைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே படுக்கையில் ஆண்கள் பல வகை புணர்ச்சிகளில் (All Kinds of Orgasms) கவனம் செலுத்தி கூட்டாளரை மகிழ்ச்சியாக வைத்திருக்கலாம்.
 
பெண்களுக்கு பொறுப்பு: எப்போதும் உடலுறவில் ஆண்களே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பது இல்லை. உங்கள் பார்ட்னரை மேலே இருக்க செய்து பாலுறவிற்கான பொறுப்பை அவர்கள் வசம் சிறிது நேரம் ஒப்படைக்கலாம். இந்த செயல் பாலுறவில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை காட்டுகிறது. 
 
உடலுறவு அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது எல்லையில்லா இன்பத்தை அவர்களால் பெற முடியும். சில செக்ஸ் பொசிஷன்கள் பெண்களுக்கு அதிகம் வேலை வைக்காமல் உச்சக்கட்டத்தை அனுபவிக்க பெண்களை அனுமதிக்கின்றன.
 
 
நாள் முழுவதும் வீட்டு வேலை, அலுவலக வேலை என்று உடலுழைப்பில் ஈடுபட்டு சோர்வாக இருக்கும் பெண்களுக்கு ஏற்ற பொசிஷன்களை கண்டறிந்து செயல்படுத்துவது அவர்களுக்கு கூடுதல் இன்பத்தை தரும். சில நேரங்களில் உங்கள் துணை பாலியல் செயல்பாட்டில் ஆர்வம் காட்டாமல் இருந்தால் திட்டவோ, சண்டையில் ஈடுபடவோ செய்யாமல் அவர் ஆர்வமில்லாமல் இருப்பதற்கான காரணங்களை கண்டுபிடித்து அதற்கேற்ப செயல்படுங்கள்.
 
 உங்களின் இந்த நிதானம் அவருக்கு உங்கள் மீதான அன்பை மேலும் அதிகரிக்க செய்யும்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்