Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

காமமும் கற்று மற தாம்பத்ய அன்பைச் செலுத்துங்கள்!

காமமும் கற்று மற தாம்பத்ய அன்பைச் செலுத்துங்கள்!

9 புரட்டாசி 2021 வியாழன் 13:34 | பார்வைகள் : 15903


 நம்மில் பிரச்சினை இல்லாதவர்களே இல்லை. உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், எனக்கு வேறொன்று. அதன் அளவீடு, தன்மை ஆகியவை நாம் வாழும் முறைக்கேற்ப மாறுபடுமே தவிர, பிரச்சினை இல்லாமலிருக்காது.

 
அதிலிருந்து ஓரளவுக்குத் தப்பித்து, கொஞ்சமாவது நிம்மதியாக வாழ, அன்பு அவசியம். அன்பின் வடிவங்கள் பல. ஏன்... அது தாம்பத்ய உறவாகவும் இருக்கலாம்.
 
`தாம்பத்யத்தில் சரியாக இருப்பதும், அன்பு செலுத்துதல்தான்’ என்கிறது பாலியல் மருத்துவம்.
 
இரு இணைகளுக்கு இடையிலான உறவில் மகிழ்ச்சி நிலவுவதில் உடலுறவுக்கு முக்கியப் பங்கிருக்கிறது.
 
இது தொடர்பாக பாலியல் மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்வில், இரு காரணங்களைக் கண்டறிந்தார்கள்.
 
உறவு வலுப்பெற
கணவன்/மனைவிக்கிடையே எந்தக் காரணத்துக்காகப் பிரச்சினை ஏற்பட்டிருந்தாலும், அதைத் தவிர்த்துவிட்டு நல்ல உறவு பேணப்பட வேண்டும் என்பதற்காக கட்டாயம் உடலுறவு கொள்ளவேண்டும்.
 
இந்த உறவின் மூலம் தன் இணையிடம் நெருக்கத்தை மேலும் அதிகரிக்கலாம்.
 
மோதலைத் தவிர்க்க...
 
தினசரி வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகளைத் தவிர்க்கவும், சண்டை, ஏமாற்றத்தைத் தவிர்க்கவும் வைத்துக்கொள்ளப்படும் உடலுறவு.
 
அதே நேரத்தில் இத்தகைய உடலுறவுகொள்ளும் நபர்களின் ஆசை மற்றும் திருப்தி, அவரின் இணைக்குக் கிடைப்பதில்லை என்றும், இது தொடரும் பட்சத்தில் கட்டாயத்தின்பேரில் இணங்குபவருக்கு நாளடைவில் பாலுறவுமீது வெறுப்பும், அது குறித்த எதிர்மறை எண்ணங்களுமே ஏற்படும் என்பதும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
 
சண்டையில்லாமல், சராசரியாக வாழும் தம்பதியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்விலும், இதே முடிவுகள் வெளியாகின.
 
அன்பு செலுத்த கால நேரம் தேவையா
`சரி... ஒருவருக்கு பூரண திருப்தியும், மற்றொருவருக்கு அத்தகைய சந்தோஷமும் கிடைக்காததால் உடலுறவுகொள்ளாமலேயே இருப்பது நல்லதா?’ இதற்கும் விடை சொல்கிறது அந்த ஆய்வு.
 
தம்பதியினர் உடலுறவுகொள்ளாத நாள்களுடன் ஒப்பிடுகையில், என்ன காரணங்களுக்காக உறவுகொண்டிருந்தாலும், கொஞ்சமாவது அவர்கள் திருப்தி பெற்றார்கள் என்பதை அவர்களால் மறுக்க இயலவில்லை.
 
அன்பு செலுத்த கால நேரம் தேவையில்லை. அதைப்போல, உங்கள் தாம்பத்ய அன்பைச் செலுத்தவும் எந்த நிபந்தனைகளும் தேவையில்லை.
 
அதே நேரத்தில், இணையால் உங்களுடன் உடல், மனரீதியாக கொஞ்சம்கூட இணங்க முடியாது என்ற சூழலில் அவர்களுடன் பலவந்தமாக உறவுகொள்ளக் கூடாது என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.
 
அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதும், அதை ஏற்றுக்கொண்டு செயல்படுவதும் முக்கியம்.
 
தங்கள் தேவைகளை பரஸ்பரம் புரிந்துகொள்வதும் அவற்றை நிறைவேற்றிக்கொள்வதும், கல்யாணமாகி 50 ஆண்டுகள் ஆனாலும் தினம் தினம் தேனிலவுக் காலமாகவே அமைய உதவும் என்பதே பாலியல் மருத்துவர்கள் கண்டறிந்த உண்மை.
 
ஆணுக்கும் பெண்ணுக்கும் செக்ஸ் நல்லது!
 
வாரத்துக்கு மூன்று முறை அல்லது அதற்கும் அதிகமாக செக்ஸ் வைத்துக்கொள்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் 50 சதவிகிதம் குறைகின்றன.
 
செக்ஸின்போது உற்பத்தியாகும் புரோலாக்டின் ஹார்மோன், முன் மூளையில், ஸ்டெம் செல்கள் மூலம் புதிய நரம்புகள் உற்பத்தியாகத் தூண்டுகின்றன.
 
ஒரு முறை செக்ஸ் வைத்துகொள்வதால் 200 கலோரிகள் உடலில் எரிக்கப்படுகின்றன. இது 15 நிமிடங்கள் ஓடுவதற்குச் சமம்.
 
தூக்கமின்மையைத் தவிர்ப்பதிலும் செக்ஸுக்கு முக்கியப் பங்குண்டு. திருப்தியான உடலுறவில் ஈடுபட்ட பிறகு நல்ல உறக்கம் நிச்சயம்.
 
தொடர்ச்சியாக ஆரோக்கியமான செக்ஸில் ஈடுபடுபவர்களுக்கு ஹார்மோன் (Dehydroepiandrosterone) குறைபாட்டால் உண்டாகும் முடி வளர்ச்சி, பார்வை தொடர்பான குறைபாடுகள் ஏற்படாது.
 
முழுமையான செக்ஸ், பெண்களின் கர்ப்பப்பையை பலப்படுத்தும். ஆண்களின் தசை மற்றும் எலும்புகளை வலுவாக்கும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்