Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

ஆண்களை நம்ப வைத்து பெண்கள் ஏன் ஏமாற்றுகிறார்கள் தெரியுமா..?

ஆண்களை நம்ப வைத்து பெண்கள் ஏன் ஏமாற்றுகிறார்கள் தெரியுமா..?

10 ஐப்பசி 2021 ஞாயிறு 04:51 | பார்வைகள் : 15460


புத்தியுள்ள எந்த ஒரு பெண்ணும் போதிய வருமானம் இல்லாத ஆணுடன் சேர்ந்து வாழ விரும்ப மாட்டாள். பெண்களின் சம்பாத்தியத்தை விட குறைவாக சம்பளம் வாங்கும் ஆண்களுக்கு இதுதான் கதி.தங்கள் மனைவியின் ரூபத்தில், ஆண்கள் தாயை எதிர்பார்ப்பதை போல, தங்கள் கணவனின் ரூபத்தில், பெண்கள்தந்தையை எதிர்ப்பார்ப்பார்கள். அதனால் தான் பக்குவமற்ற முறையில் தங்கள் கணவன் நடப்பது பெண்களுக்கு பிடிப்பதில்லை.

 
ஏதோ சில சந்தர்ப்பங்களில் நடக்கிறது என்றால் அவர்கள் பொறுத்து கொள்வார்கள். ஆனால் இதே குணம் உங்களிடம் நிரந்தரமாக நீடித்தால், கண்டிப்பாக உங்களை ஒரு நாள் தூக்கி எறிந்து விடுவார்கள்.
 
முன்பெல்லாம், “சம்பளத்தை கேட்காதே” என்ற விதி ஆண்களுக்கு மட்டுமே பொருந்தியது. ஆனால் இன்று பெண்களும் சமநிலை போட்டியாளராக திகழ்கிறார்கள்.அதனால் அவர்களை தொழில் ரீதியாக நீங்கள் ஊக்குவிக்கவில்லை என்றாலோ, அல்லது தொழில் ரீதியாக தேவையற்ற தொந்தரவை கொடுத்தாலோ, உங்களை அவர்கள் தூக்கி எறிந்து விடுவார்கள்.
 
உங்களை பொறுத்த வரை, உங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என நினைத்து அதற்கான காலடிகளை வேகமாக எடுத்து வைப்பீர்கள்.அதனால் அவர்களிடம் நீங்கள் உரிமை எடுத்துக் கொண்டு, பாலியல் ரீதியாக அத்து மீறும் போது, அவர்களிடம் நீங்கள் தவறாக நடக்க முயற்சி செய்கிறீர்கள் என நினைத்து உங்களை விட்டு பிரிய முற்படலாம்.
 
உங்கள் காதலியை நீங்கள் விரைவிலேயே திருமணம் செய்ய கேட்கலாம். அவருக்கோ இந்த உறவு கழுத்தை நெறிப்பதை போன்ற உணர்வு ஏற்படலாம். அப்படிப்பட்ட நேரத்தில், அவர் உங்களை நிராகரிக்கலாம்.பெண்கள் தங்களுக்கென குடும்பம் மற்றும் குழந்தைகள் என அமைத்து கொள்வதில் மிகவும் குறியாக இருப்பார்கள்.
 
அவர்களுக்கு குழந்தை குட்டி என பெரிய குடும்பமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் இருந்து, உங்களுக்கு அதில் உடன்பாடு இல்லாமல் இருந்தால், அவர்கள் உங்களை விட்டு பிரியலாம். பெண்கள் சமரசம் செய்ய விரும்பாத விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.பொதுவாக தன் காதலனை வளர்த்த தாய், அவருடன் எப்படி நடந்து கொள்வாரோ, அதே அளவிற்கு அதே குணத்துடன் தான் திகழ்வார்கள் என்பது பெண்களின் நம்பிக்கையாகும்.
 
ஆனால் அப்படி இல்லாமல், அவளுக்கும் உங்கள் தாய்க்கும் ஒத்து போகாமல், நீங்கள் உங்கள் தாய்க்கு எப்போதும் ஆதரவாக பேசினால், அவருக்கு உங்கள் மீதும் ஒரு வெறுப்பு உண்டாகலாம். இதனாலும் பிரியக்கூடும்.ஆண்களின் மீது பெண்களுக்கு சுலபத்தில் சலிப்பு ஏற்பட்டு விடும். அதனால் தான் என்னவோ,கெட்ட பசங்களை தேடி தான் பெண்கள் செல்வார்கள் என்ற சொல் உண்டு. நீங்கள் மிகவும் நல்லவராக இருந்தால், உங்கள் காதலி உங்களை விட்டு சென்று விடலாம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்