Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

பெண்களிடம் ஆண்கள் விரும்பும் சீக்ரெட் விஷயங்கள் இதுதான்..!

பெண்களிடம் ஆண்கள் விரும்பும் சீக்ரெட் விஷயங்கள் இதுதான்..!

27 ஐப்பசி 2021 புதன் 11:38 | பார்வைகள் : 16625


 தன்னை விட வயதில் குறைந்தவர் இருப்பது நமக்கு மிகவும் பாதுகாப்பான மனநிலையை தரும். இப்போது நான் 40 வயதை எட்டி இருக்கிறேன். காதலுக்கு உத்தரவாதமில்லாத உலகில் எனக்கு பாதுகாப்பு உணர்வைத் தரும் மனைவியைத் தேடவே விரும்புகிறேன்.

 
ஆண்கள் பெண்களிடத்தில், பெண்கள் ஆண்களிடத்திலும் தன்வயப்படுவது இயல்பான விஷயமாகும். வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள். இதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. வயதான ஆண்கள் உண்மையில் எதனால் ஈர்க்கப்படுகிறார்கள் என்று யோசித்து இருக்கிறீர்களா? வயதான ஆண்களை அதாவது தங்களை விட வயதில் சற்று மூத்தவர்களை திருமணம் செய்யவே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள்.
 
தங்களை விட வயதானவர் இடத்தில் அன்பு, பாதுகாப்பு, நம்பிக்கை கூடுதலாக இருப்பதாக பெண்கள் நம்புகிறார்கள். ஆண்கள் பெண்களை எவ்வாறு நினைக்கின்றனர்? குறிப்பாக தன்னை விட வயதில் குறைந்த பெண்களிடத்தில் ஆண்கள் விரும்புவது என்ன? பெண்ணில் தங்களை ஈர்க்கும் விஷயங்கள் என்ன? என்று திருமணமான மற்றும் திருமணம் ஆகாத ஆண்கள் தெரிவித்துள்ளார்கள். அதனை பற்றி இங்கு பார்ப்போம்.
 
கலகலப்பு : நான் கொஞ்சம் அடிக்கடி கோபப்படுவேன். எரிச்சல் ஆனவனாகவும் இருப்பேன். என்னை போல இன்னொருவரும் இருக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் நான் கொஞ்சம் விளையாட்டுத்தனமாகவும் கலகலப்பாகவும் இருக்கும் ஒருவருடன் இருக்க விரும்புகிறேன். எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கும் ஒரு நபர் இருந்தால், உறவு மகிழ்ச்சியாக இருக்கும் என்று நான் உணர்கிறேன். இது இருவரிடையே சரியான சமநிலையை உருவாக்கும்’ என மோஹித் என்பவர் தெரிவித்துள்ளார்.
 
பாதுகாப்பான உணர்வு : தன்னை விட வயதில் குறைந்தவர் இருப்பது நமக்கு மிகவும் பாதுகாப்பான மனநிலையை தரும். இப்போது நான் 40 வயதை எட்டி இருக்கிறேன். காதலுக்கு உத்தரவாதமில்லாத உலகில் எனக்கு பாதுகாப்பு உணர்வைத் தரும் மனைவியைத் தேடவே விரும்புகிறேன். சிலர் என்னிடம் உனக்கு திருமண வயது கூடிவிட்டது என்று கூறுகிறார்கள். நான் அதை நம்பவில்லை. சரியான நபர் உங்கள் வாழ்க்கையில் வரும் போது எல்லாம் நல்லதாகவே நடக்கும் என ஹர்ஷ் கூறுகிறார்.
 
குழந்தைகள் : குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும் பெண்களை கண்டதும் ஈர்க்கப்படுகிறேன். காரணம் என்னவென்றால், குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும் ஒரு பெண் மிகவும் அக்கறையுடனும், ஆதரவுடனும் இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆண்களில் இந்த குணத்தை கொண்டவர்கள் மிகவும் குறைவே ஆகும் என சரிஸ் என்பவர் கூறியுள்ளார்.
 
சீக்ரெட் : பெண்கள் தங்களைப் பற்றிய அனைத்தையும் வெளிப்படுத்தாமல் எதையும் ‘சீக்ரெட்’ ஆக வைத்திருப்பார்கள். இது அவர்களை பற்றி அறிந்து கொள்ள ஆர்வத்தை தூண்டுகிறது. இத்தகைய மர்மமான ஆளுமை உடைய பெண்களை பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது என்கிறார் முகேஷ்.
 
இளமை திரும்புதல் : நீங்கள் உங்களை விட சிறிய வயது பெண்களுடன் டேட்டிங்கோ அல்லது பழகுவதோ உங்களை இளமையாக மாற்றலாம். நீங்கள் அவர்கள் வயதில் இருப்பது போல உணர்வைத் தரும். ஒருவரையொருவர் நேர்மையாக நேசிக்கும் போது வயது என்பது தடை இல்லை. உங்களை நன்றாக புரிந்து கொண்ட ஒருவர், உங்கள் வாழ்வில் வருவதே உங்கள் வாழ்க்கையை அழகாக்கும் விஷால் கூறுகிறார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்