Paristamil Navigation Paristamil advert login

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான அறிகுறிகள்: உறுதிப்படுத்தும் நாசா

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான அறிகுறிகள்: உறுதிப்படுத்தும் நாசா

28 ஆவணி 2012 செவ்வாய் 12:19 | பார்வைகள் : 9237


செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழும் சாத்தியம் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

செவ்வாய் கிரகத்திலிருந்து கியூரியாசிட்டி அனுப்பியுள்ள டிஜிட்டல் பதிவு ஒன்றின் அடிப்படையிலேயே இந்த தகவல் வெளியாகியள்ளது.

கியூரியாசிட்டி அனுப்பியுள்ள டிஜிட்டல் பதிவு ஒன்றில் மனிதர்களின் குரல்களை ஒத்த ஒலி பதிவாகியுள்ளது தெரிய வந்துள்ளது.

நாசா விஞ்ஞானிகளால் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள, கியூரியாசிட்டி விண்கலம் அங்கு தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளது.

கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தை துளையிட்டும் படம் பிடித்தும் ஆய்வறிக்கையை அனுப்பி வருகிறது.

இந்த நிலையில் கியூரியாசிட்டி விண்கலம் கடந்த வாரம் பதிவு செய்து அனுப்பிய ஒலிப்பதிவை, விஞ்ஞானிகள் ஆய்வு செய்தபோது, அதில் மனிதர்களின் குரலை ஒத்த பல்வேறு சத்தங்கள் பதிவாகியிருப்பதை கண்டறிந்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்களின் குரல் பதிவாகியுள்ளதால், அங்கு மனிதர்கள் வசிப்பது உறுதியாகியுள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

நாசா விஞ்ஞானிகளால் அனுப்பபட்ட கியூரியாசிட்டி விண்கலம், செவ்வாயில் மனிதர்கள் வாழுவதற்கான ஏதுநிலைகள் காணப்படுகின்றதா என்பது குறித்து ஆராய கடந்த 6ஆம் திகதி அங்கு தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்