ஒரே நேரத்தில் 3 சூரியன்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!
15 மார்கழி 2019 ஞாயிறு 11:01 | பார்வைகள் : 15084
சீனாவில் ஒரே நேரத்தில் 3 சூரியன்கள் தெரிந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேற்குப் பகுதியின் ஸின்ஜியாங் மாகாணத்தில் உள்ள கோர்காஸ் நகரத்தில் வியாழக்கிழமை இந்த அதிசய நிகழ்வு நடந்தது. முதலில் இரண்டு சூரியன்கள் தெரிந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்ட மக்கள் அடுத்த சில மணி நேரத்தில் 3வது சூரியனும் வானில் உதயமானதால் அதிர்ச்சியடைந்தனர்.
சூரிய ஒளி ஈரப்பகுதியை ஊடுருவிச் செல்லும்போது வானில் இருக்கும் பனித்துகள்களின் மீது பட்டு பிரதிபலிப்பதால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக பனிப்பிரதேசத்தில் தெரியும் இந்த நிகழ்வு பனிப்பொழிவு குறைந்த ஸின்ஜியாங் மாகாணத்தில் ஏற்பட்டது அதிசய நிகழ்வுதான் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Vente
A VENDRE :
Une maison 80 M2 type F4,
Emploi - வேலை வாய்ப்பு
பரிஸ் 17 இல் உள்ள சிறிய Super Market ஒன்றிற்கு
Architecte - plan divers
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire