தாயகம் திரும்பிய அர்ஜென்டினா அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
22 ஆடி 2026 புதன் 05:31 | பார்வைகள் : 140
உலகக்கிண்ணத்தை இழந்தாலும் தாயகம் திரும்பிய அர்ஜென்டினா அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
FIFA உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில், ஸ்பெயின் அணியிடம் அர்ஜென்டினா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து வீரர்கள் தாயகம் திரும்பினர்.
பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி மற்றும் அணியின் மற்ற வீரர்கள் விமானத்திற்கு வெளியே சிவப்பு கம்பள வரவேற்பு மற்றும் இராணுவ இசைக்குழுவின் வரவேற்கப்பட்டனர்.
அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கடும் குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் உற்சாக வீரர்களை வரவேற்றனர்.
வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மக்கள் நடனமாடியும், பாடியும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடினர்.
முன்னதாக, அணியின் சில வீரர்கள் மற்றும் உறுப்பினர்கள் தாயகம் திரும்பும் விமானத்தில் செல்ல மாட்டார்கள் என அர்ஜென்டினா கால்பந்து சங்கம் தெரிவித்திருந்தது.
அதன்படி, நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) குழுவினருடன் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire