Paristamil Navigation Paristamil advert login

அரசின் சாதனைகளை மக்களிடம் சொல்ல வேண்டும்: பிரதமர் மோடி

அரசின் சாதனைகளை மக்களிடம் சொல்ல வேண்டும்: பிரதமர் மோடி

22 ஆடி 2026 புதன் 10:10 | பார்வைகள் : 141


எம்பிக்கள் அனைவரும் தங்களின் வாழ்க்கையை நாட்டிற்காக அர்ப்பணிப்பதுடன், அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டில்லியில் இன்று தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இது தொடர்பாக பாஜவின் செய்தித் தொடர்பாளர் தருண் சுக் கூறியதாவது:  அனைவருக்கும் தேசமே முதன்மையாக கருத வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும்.எம்பிக்கள் அனைவரும்  தங்களது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும்  நாட்டின் நலனுக்காக  பாடுபட வேண்டும்.

இன்று ஒட்டுமொத்த உலக நாடுகளும் இந்தியஇளைஞர்களின் குரலை கேட்கின்றன. முன் எப்போதும் இல்லாத வகையில் நாடு வளர்ச்சி பெற்று வருகிறது.  நமது பொருளாதாரம், பாதுகாப்பு கொள்கை , நலத்திட்டங்கள் எதுவானாலும் ஒட்டு மொத்த உலகமும் இந்தியாவை பாராட்டி வருகின்றன.  பல நாடுகளுடன் கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவை இன்னும் உயரத்துக்கு கொண்டு செல்லும் என்று பிரதமர் பேசினார். இவ்வாறு தருண் சுக் கூறினார்