Paristamil Navigation Paristamil advert login

மத்திய கிழக்கில் பதற்றம் - ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

மத்திய கிழக்கில் பதற்றம் - ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

21 ஆடி 2026 செவ்வாய் 18:50 | பார்வைகள் : 175


மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, குவைத் நோக்கிய தனது விமான சேவைகளை ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.

இதன்படி, திங்கட்கிழமை (20) முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை குவைத்திற்கான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் அல்லது உதவிகள் தேவைப்படும் பயணிகள் உள்நாட்டு தொடர்புகளுக்கு 1979 , சர்வதேச தொடர்புகளுக்கு +94 11 777 1979 , வாட்ஸ்அப் +94 74 444 1979 போன்ற தொலைபேசி இலக்கங்கள் மூலம் விமான நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தங்களது பயண முகவர்களைத் தொடர்புகொள்ளுமாறும், மேலதிக தகவல்களுக்கு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் பார்வையிடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.