Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து - ஐவர் பலி

இலங்கையில் தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து - ஐவர் பலி

21 ஆடி 2026 செவ்வாய் 12:07 | பார்வைகள் : 169


ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது தீ கட்டுப்படுத்தப்பட்டு வரும் அதேவேளையில், தீயில் சிக்கியுள்ளவர்களைக் கண்டறிவதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்று (21) காலை இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், அந்நேரத்தில் 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அங்கு இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் எவரேனும் உள்ளே சிக்கியுள்ளனரா? என்பதைக் கண்டறிவதற்காக தொடர்ந்து மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.