வியட்நாமில் நடுவீதியில் தீப்பற்றி எரிந்த பஸ் - 7 பேர் உயிரிழப்பு
21 ஆடி 2026 செவ்வாய் 10:39 | பார்வைகள் : 267
தெற்கு வியட்நாமில் செவ்வாய்க்கிழமை 21.07.2026 அதிகாலை பஸ் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 7 பயணிகள் உயிரிழந்ததாகவும் 5 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லாம் டோங் (Lam Dong) மாகாணத்திலிருந்து அருகில் உள்ள வணிக மையமான ஹோ சி மின் நகரத்துக்குச் சென்றுகொண்டிருந்த பஸ்ஸே திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
தீ வேகமாக வாகனம் முழுவதும் பரவியதால், அதற்குள் இருந்த பயணிகள் வெளியேற முடியாமல் வாகனத்துக்குள்ளேயே மாட்டிக்கொண்டனர் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
24 இருக்கைகள் கொண்ட அந்த பஸ்ஸில் தீ பரவியதற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire