Paristamil Navigation Paristamil advert login

மேகதாது அணை விவகாரம்: முதல்வர் விஜய் ஆலோசனை

மேகதாது அணை விவகாரம்: முதல்வர் விஜய் ஆலோசனை

21 ஆடி 2026 செவ்வாய் 07:31 | பார்வைகள் : 261


மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோருடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழக சட்டசபையிலும், அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை தடுப்பது குறித்து அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா மற்றும் நிர்மல் குமார் ஆகியோருடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தி இருந்தார். இந்த ஆலோசனையில் தலைமைச் செயலர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதன் பிறகு நிருபர்களிடம் அமைச்சர் நிர்மல் குமார் கூறும்போது,மேகதாது தொடர்பான அனைத்து வல்லுநர்கள், 15 ஆண்டுகளாக சட்டப்போராட்டம்  நடத்தும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடந்தது. ஒரு சில ஆலோசனைகளின் பேரில் சில முடிவுகள் அடுத்தடுத்த வாரங்களில் எடுக்கப்படும். தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் உத்தரவிடுவார். ஒரு வாரம், 10 நாளில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்பது வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.