Paristamil Navigation Paristamil advert login

திமுக ஆட்சியில் முதல்வரை எதிர்த்து பேசியவர்கள் மீது குண்டாஸ் : நிர்மல் குமார்

திமுக ஆட்சியில் முதல்வரை எதிர்த்து பேசியவர்கள் மீது குண்டாஸ் : நிர்மல் குமார்

21 ஆடி 2026 செவ்வாய் 05:14 | பார்வைகள் : 271


நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லை. இந்தத் தேர்வு மாணவர்கள், பெற்றோர்களுக்கு எதிரானது. இந்தத் தேர்வு தேவையில்லை என்பது எங்களின் நிலைப்பாடு. அதில் மாற்றம் கிடையாது. மத்திய அரசால் தான் தடுக்க முடியும்.

கடந்த முறை உதயநிதி ரகசியம் இருக்கிறது என்று சொன்னார்.  அந்த மாதிரி பொய்யான கருத்தை, வாக்குறுதியை எங்களால் சொல்ல முடியாது.

மத்திய அரசு தான் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். நீட் மாணவர்களுக்கு எதிரானது. ஒவ்வொரு ஆண்டும் குளறுபடி நடந்துள்ளது. குளறுபடி காரணமாக ஆயிரக்கணக்கான  தரமற்றோர் டாக்டர்கள் ஆகி உள்ளனர். இதற்கு மத்திய அரசு தான் பொறுப்பு. கட்சி சார்பாக, முதல்வர் சார்பாக எங்களது கருத்தை தெரிவித்து விட்டோம்.

விளாத்திகுளம் எம்எல்ஏ, முதல்வரை அச்சுறுத்தும் வகையில் பேசினால், சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கத்தான் செய்வார்கள். உங்கள் ஆட்சியில் டுவீட் போட்டதற்காக எத்தனை பேர் மீது குண்டாஸ் போட்டனர். முதல்வரை எதிர்த்து டுவீட் போட்டதற்காக குண்டாஸ் போடப்பட்டது. முதல்வரை எதிராக ஒரு வார்த்தை பேசியதற்காக 70 வயதுக்கு மேற்பட்ட மூதாட்டியை பிடிக்க  ஐந்து தனிப்படைகள் அமைத்தது தான் திமுக அரசு

மூன்றாம் நபராக இருந்தால் பரவாயில்லை. எம்எல்ஏ ஒருவர் மேடையில் அவதூறாக மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினால் அது சட்டம் ஒழுங்கு பிரச்னை. சாதாரண பிரச்னை இல்லை. மூன்றாம் தரப்பு நபர்  சாலையில் பேசினால் விட்டுச் செல்லலாம். எம்எல்ஏ மைக் பிடித்து  அனைவர் முன்னால் பேசினால் சட்டம் ஒழுங்கு பிரச்னை. பொது மக்கள்,  தவெகவினர்  கேட்டால் பெரிய கைகலப்பு தான் உருவாகும்.எம்எல்ஏ என்ன பேச வேண்டும் என உள்ளது.

கடந்த ஆட்சியில் யாரும், முதல்வருக்கு மிரட்டல் விடுத்து பேசவில்லை. மாப்பிள்ளை, மகன், முதல்வரை சொன்னால் குண்டாஸ் போட்டனர்.  

டிராமா செய்கின்றனர். கரூர்காரர் கட்டிலுக்கு அடியில் அழுகிறார். காரில் ஏறி மயக்கம் வருது என  தற்போது எம்எல்ஏ அழுகிறார். போலீசார்  நடவடிக்கையை எடுக்க வேண்டாமா? புகார் வந்துள்ளது. அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். டிராமா போட்டால் என்ன செய்ய முடியும்.

அதிமுகவினர் விலகல்

அதிமுக கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர், நிர்வாகிகள் விலகி வந்தால் குதிரை பேரம் என்றால் எப்படி ? எங்கள் எம்எல்ஏவிடம் பேரம் பேசினார்கள். பணம் பிடிபட்டுள்ளது. பேசியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பேசிய ஆடியோ உள்ளது.

நாங்கள் யாரிடமாவது பேசி உள்ளோமா? எந்த உத்தரவாதம் எதும் கிடையாது. அவர்களாக விரும்பி, வந்துள்ளனர். எங்கள் எம்எல்ஏவிடம் பேசியது தான் குதிரை பேரம்.

இவ்வாறு நிர்மல் குமார் கூறினார்.