இலங்கையில் பயிர் சேதம் தொடர்பான தகராறு - நஷ்டஈடு வழங்கச் சென்றவர் கொலை
20 ஆடி 2026 திங்கள் 16:16 | பார்வைகள் : 268
பயிர்களை கால்நடை நாசம் செய்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அஹுங்கம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தன்னுடைய கால்நடைகள், மற்றொருவரது பயறு தோட்டத்தை சேதப்படுத்தியதற்காக, அவருக்கு நஷ்டஈடு வழங்குவதற்காக பாதிக்கப்பட்டவர் சந்தேகநபர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, அது கைகலப்பாக மாறியுள்ளது.
இந்தச் சம்பவத்தின்போது, சம்பந்தப்பட்ட சந்தேகநபரும் அவரது சகோதரரும் இணைந்து, நஷ்டஈடு வழங்கச் சென்றவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாகத் தலைமறைவாக உள்ள சந்தேகநபர் மற்றும் அவரது சகோதரரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire