Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு! சந்தேகநபர் உட்பட 10 பேர் காயம்!

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு! சந்தேகநபர் உட்பட 10 பேர் காயம்!

20 ஆடி 2026 திங்கள் 14:17 | பார்வைகள் : 378


அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள டியூக்சன்  நகரின் வணிகப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 19.07.2026 அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், சந்தேகநபர் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளதாக  தகவல்வெளியாகியுள்ளது.

அந்நாட்டு பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (19)  சுற்றுவளைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்ட திசையை நோக்கி விரைந்துள்ளனர்.

அங்கு துப்பாக்கியுடன் நின்றிருந்த சந்தேகநபருக்கு பொலிஸார் பலமுறை எச்சரிக்கை விடுத்த போதிலும், அவர் அதற்குக் கீழ்ப்படியாததால் பொலிஸார் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த சந்தேகநபருக்கு உடனடியாக பொலிஸாரால் முதலுதவி அளிக்கப்பட்டு ஆபத்தான நிலையில்  அந்நாட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னரே ஏனைய 9 பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்திருந்துள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோருக்குக் கை, கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்கள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த அனைவரும் பெரியவர்கள் எனவும், பொலிஸ் அதிகாரிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான உடனடிக் காரணம் என்ன என்பது குறித்து பொலிஸார் உத்தியோகபூர்வ விவரங்கள் எதையும் வெளியிடவில்லை.

அதேவேளை, இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலே இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணம் எனவும், இதில் பாதசாரிகளும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளனர் எனவம் பொலிஸ் ஆதாரங்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.