Paristamil Navigation Paristamil advert login

ரோஹித் ஷர்மா 138 ஓட்டங்கள் விளாசியும் வீண்! இந்தியாவிற்கு எதிரான தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து

ரோஹித் ஷர்மா 138 ஓட்டங்கள் விளாசியும் வீண்!  இந்தியாவிற்கு எதிரான தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து

20 ஆடி 2026 திங்கள் 10:40 | பார்வைகள் : 252


இந்திய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றியது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.

முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 387 ஓட்டங்கள் குவித்தது. பென் டக்கெட் (Ben Duckett) 141 ஓட்டங்களும், பெத்தெல் 91 ஓட்டங்களும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 360 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது.

ரோஹித் ஷர்மா (Rohit Sharma) 138 ஓட்டங்களும், கில் 77 ஓட்டங்களும், விராட் கோஹ்லி (Virat Kohli) 74 ஓட்டங்களும் விளாசினர்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. ஜோ ரூட் (Joe Root) ஆட்டநாயகன் விருது பெற்றார்.