வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்த Créteil கேபிள் கார்!!
19 ஆடி 2026 ஞாயிறு 21:58 | பார்வைகள் : 1927
Créteil கேபிள் கார் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் புதிய ஈர்ப்பாக மாறியுள்ளது. இல்-து-பிரான்ஸ் பகுதியில் அமைக்கப்பட்ட முதல் நகர்ப்புற கேபிள் கார் மற்றும் ஐரோப்பாவின் மிக நீளமான இந்த சேவை, கடந்த ஏழு மாதங்களில் 18 லட்சத்திற்கும் அதிகமான பயணிகளை ஈர்த்துள்ளது. பரிஸுக்கு வரும் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இதை ஒரு தனித்துவமான அனுபவமாகக் கருதி பயணம் செய்கின்றனர்.
லுக்சம்பேர்க் நாட்டைச் சேர்ந்த ஜோசப், லூவர் அருங்காட்சியகம் மற்றும் ஃஈபிலள் கோபுரம் போன்ற முக்கிய இடங்களுடன் கிரெட்டெய்ல் கேபிள் காரையும் தனது சுற்றுலா திட்டத்தில் சேர்த்துள்ளார். வெறும் 2 யூரோ கட்டணத்தில் பயணம் செய்யும் இந்த சேவை, மேலிருந்து நகரத்தின் அழகிய காட்சிகளை ரசிக்கும் வாய்ப்பை வழங்குவதால் அவரை மிகவும் கவர்ந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இத்தாலியில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளும் இந்த கேபிள் காரை பாராட்டியுள்ளனர். லொஸ் ஏஞ்சலஸைச் சேர்ந்த கோகோ கிரிஸ்டல், "போக்குவரத்து நெரிசல் இல்லாத அற்புதமான அனுபவம்" என்று கூறியுள்ளார். இத்தாலியைச் சேர்ந்த அட்ரியான்னா, இன்ஸ்டாகிராமில் இதைப் பார்த்த பிறகு நேரில் வந்து அனுபவித்ததாக தெரிவித்தார்.
ஸ்பெயினின் மாட்ரிட் நகரைச் சேர்ந்த ஒரு குடும்பமும் நெடுஞ்சாலையில் இருந்து கேபிள் காரைக் கண்டு திடீரென பயணம் செய்ய முடிவு செய்தது. மாட்ரிட்டிலும் இதுபோன்ற பொதுப் போக்குவரத்து வசதி அமைய வேண்டும் என்று அவர்கள் விருப்பம் தெரிவித்தனர். இதனால், கிரெட்டெய்ல் கேபிள் கார் ஒரு போக்குவரத்து சேவையைத் தாண்டி, சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் புதிய அடையாளமாக உருவெடுத்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire