முதல்வர் விஜய் மீது விஷக்கணைகளை கூட்டணி கட்சிகளே வீசுகின்றன: வைகோ
20 ஆடி 2026 திங்கள் 08:01 | பார்வைகள் : 304
முதல்வர் விஜய் மீது விஷக்கணைகளை கூட்டணி கட்சிகளே வீசுகின்றன என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
தி.மு.க., - த.வெ.க., ஆகிய இரு கட்சிகளும் 'இண்டி' கூட்டணியில், இடம் பெற வேண்டும்; தி.மு.க..,வுடன் நட்பு நீடிக்கிறது' என, திருமாவளவன் சமீபத்தில் கூறியதை கண்டித்த வைகோ, 'இந்த கருத்துக்காக, திருமாவளவனுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்' என கிண்டலாக கூறினார்.
இந்நிலையில், ம.தி.மு.க., அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'சங்கொலி'யின் 30ம் ஆண்டு விழா, சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்பதாக கூறிய திருமாவளவன், கடைசி நேரத்தில், தன்னால் வர இயலாது என, தெரிவித்து விட்டார். த.வெ.க, சார்பில், அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்றார்.
விழாவில் வைகோ பேசியதாவது:கடந்த சில நாட்களாக, முதல்வர் விஜய் மீதும், த.வெ.க., அரசு மீதும் விஷக்கணைகளை, எதிரிகள் வட்டாரம் மட்டுமல்ல, கூட்டணி கட்சிகளின் வட்டாரங்களில் இருந்தும் பிரயோகிக்கின்றனர். தி.மு.க., ஆட்சியின்போது, உங்கள் விஷ பாணங்கள் எங்கே போயின; அப்போது ஏன் வீசவில்லை.
கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்கிற கட்சியாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி விளங்குகிறது. கூட்டணி என, வந்த பின், முதல்வர் விஜய் மீதோ, அமைச்சர்கள் மீதோ, ஒரு விமர்சனத்தை கூட அக்கட்சி வைத்தது இல்லை. விமர்சிக்க விரும்பினால், அமைச்சரை பார்த்து சொல்லுங்கள்; ஏன் முதல்வரை சந்தித்து கூட சொல்லலாம்.
ஊடகங்களில் எதற்காக தினமும் சொல்கிறீர்கள்; விமர்சனம் செய்கிறீர்கள்? நம் தயவில் தான் விஜய் ஆட்சி நடக்கிறது, எந்த நேரத்திலும் கவிழ்க்கலாம் என கருதுகிறீர்களா; என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்.
ஆறு மாதங்களில் தேர்தல் வரும் என மிரட்டுகிறார்கள். பா.ஜ.,வுடன் மறைமுக தொடர்பு வைத்துள்ளார்கள். நான் சவால் விடுகிறேன். தேர்தல் வரட்டும், 180 தொகுதிகளில் விஜய் அணி வெற்றி பெறும். இவ்வாறு வைகோ பேசினார்.
விசிக, மதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே, மோதல் போக்கு தொடரும் நிலையில், த.வெ.க.,வும் கண்டு கொள்ளாமல் இருப்பது, அரசியல் வட்டாரத்தில், பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire