Ather Energy-ல் Hero MotoCorp ரூ.1000 கோடி முதலீடு., வரவிருக்கும் புதிய மின்சார ஸ்கூட்டர்கள்
19 ஆடி 2026 ஞாயிறு 11:30 | பார்வைகள் : 256
இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளர் Hero MotoCorp, பெங்களூரைச் சேர்ந்த Ather Energy நிறுவனத்தில் ரூ.1000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
Hero ஏற்கனவே Ather-இல் 29.48 சதவீதம் பங்குகளை வைத்திருக்கிறது. இந்த புதிய முதலீடு அடுத்த 15 நாட்களில் நிறைவேறும் என தகவல் வெளியாகியுள்ளது.
Ather நிறுவனம் விரைவில் EL01 என்ற குறைந்த விலை மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளது. இது ஆகஸ்ட் 29 அன்று பெங்களூரில் நடைபெறும் Annual Community Day நிகழ்ச்சியில் வெளியிடப்படும்.
EL01 மாடல், Ather-இன் தற்போதைய Rizta மற்றும் 450 மாடல்களை விட குறைந்த விலையில் கிடைக்கும். Rizta S தற்போது ரூ.1.17 லட்சம் (ex-showroom, Bengaluru) விலையில் விற்கப்படுகிறது.
EL01 மாடலில் 14-இஞ்ச் முன் சக்கரம், 12-இஞ்ச் பின்சக்கரம், LED DRL, AEBS (Advanced Electronic Braking System), 7-இஞ்ச் TFT டிஸ்ப்ளே, voice command வசதி போன்ற அம்சங்கள் இடம்பெறும்.
AtherStack 7.0 சாப்ட்வேர் மூலம் இயங்கும் இந்த ஸ்கூட்டர், 2.9 kWh மற்றும் 3.7 kWh பேட்டரி விருப்பங்களுடன் 123-159 கி.மீ. வரை பயணிக்க முடியும். இந்த முதலீடு Ather Energy-க்கு விற்பனை வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.
புதிய EL platform அடிப்படையில் குடும்ப ஸ்கூட்டர், maxi-scooter மற்றும் உயர் செயல்திறன் மாடல்கள் விரைவில் சந்தையில் அறிமுகமாகும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire