உலகக் கோப்பையில் 70 லட்சம் துஷ்பிரயோக கருத்துகள்- FIFA தகவல்
19 ஆடி 2026 ஞாயிறு 12:26 | பார்வைகள் : 146
2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் காலத்தில், வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளை குறிவைத்து 70 லட்சத்திற்கும் மேற்பட்ட துஷ்பிரயோக மற்றும் ஆபத்தான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பதிவானதாக FIFA தெரிவித்துள்ளது.
FIFA-வின் Social Media Protection Service (SMPS), செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இந்த கருத்துகளை கண்டறிந்துள்ளது.
2022 உலகக் கோப்பையுடன் ஒப்பிடும்போது, இந்த முறை கண்டறியப்பட்ட துஷ்பிரயோக பதிவுகள் 14 மடங்கு அதிகம்.
இதுவரை 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட AI-ஆல் கண்டறியப்பட்ட செய்திகளை SMPS குழு ஆய்வு செய்துள்ளது. 1,000-க்கும் மேற்பட்ட மிரட்டல் பதிவுகள் சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் புகாரளிக்கப்பட்டுள்ளன.
மொத்தத்தில், உலகக் கோப்பை தொடங்கியதிலிருந்து 53 மில்லியனுக்கும் மேற்பட்ட பதிவுகள் மற்றும் கருத்துகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இனவெறி சார்ந்த அவமதிப்பு பதிவுகள் மட்டும் 11 சதவீதம் என FIFA தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள், வீரர்கள் மற்றும் அணிகள் சமூக வலைத்தளங்களில் பாதுகாப்பாக இருக்க உதவுவதாக FIFA தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire