Paristamil Navigation Paristamil advert login

உலகக் கோப்பை வரலாற்றில் 22 கோல்கள் அடித்த முதல் வீரர்- கிலியன் எம்பாப்வே சாதனை

உலகக் கோப்பை வரலாற்றில் 22 கோல்கள் அடித்த முதல் வீரர்- கிலியன் எம்பாப்வே சாதனை

19 ஆடி 2026 ஞாயிறு 11:24 | பார்வைகள் : 249


உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை பிரான்ஸ் அணியின் கேப்டன் கிலியன் எம்பாப்பே படைத்துள்ளார்.

2026ம் ஆண்டின் உலகக் கோப்பை கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மூன்றாவது இடத்திற்கான போட்டியில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.

விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்ற இந்த போட்டியில் 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெண்கலப் பட்டம் வென்றுள்ளது.

இந்த போட்டியில் பிரான்ஸ் அணியின் கேப்டன் கிலியன் எம்பாப்பே(Kylian Mbappe) 2 கோல்களை அடித்து அசத்தினார்.

இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் 22 கோல்களுடன் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸியின்( Lionel Messi) சாதனையை பின்னுக்கு தள்ளி எம்பாப்பே முதலிடம் பிடித்துள்ளார்.

அத்துடன் இந்த தொடரில் அதிக கோல் அடித்த வீரர்களுக்கான கோல்டன் பூட்(Golden Boot) விருதுக்கான போட்டியிலும் முன்னிலையில் உள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாட உள்ள அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸியை விட பிரான்ஸ் வீரர் எம்பாப்வே 2 கோல்கள் முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.