ஜப்பானின் புதிய அதிநவீன போர் விமானம்! முதல்முறையாக வானில் பறந்த Kawasaki EC-2
19 ஆடி 2026 ஞாயிறு 09:15 | பார்வைகள் : 350
ஜப்பான் தனது புதிய அதிநவீன மின்னணு போர்த் தொழில்நுட்ப விமானமான Kawasaki EC-2ஐ கிஃபு விமானத் தளத்தில் முதல் முறையாக பறக்கவிட்டு சோதனை மேற்கொண்டது.
சீனா தைவான் நீரிணை மற்றும் கிழக்கு சீனக் கடலில் தனது வான்வழி பாதுகாப்பு வலையமைப்புகளை விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் சூழலில், இந்த விமானம் ஜப்பானின் பாதுகாப்புத் திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
EC-2, பழைய EC-1 விமானத்தை விட அதிக திறன் கொண்டதாகும். “பிளாட்டிபஸ்” (Platypus) என அழைக்கப்படும் தனித்துவமான முன்பகுதி, J/ALQ-5 மின்னணு எதிர்ப்பு அமைப்பு மற்றும் தொஷிபா நிறுவனத்தின் ஜாமிங் ஆன்டினாக்களைக் கொண்டுள்ளது.
இது எதிரி ரேடார் மற்றும் தொடர்பு அமைப்புகளை தொலைவிலிருந்தே குழப்பக்கூடிய திறன் பெற்றுள்ளது.
ஜப்பான் 2022 தேசிய பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மின்னணு போர்த் திறனை மேம்படுத்த 260 மில்லியன் டொலர் மதிப்பிலான திட்டத்தை மேற்கொண்டுள்ளது.
EC-2 விமானங்கள் 2027-ஆம் ஆண்டுக்குள் முழுமையாக சேவையில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம், 1986 முதல் செயல்பட்ட EC-1 விமானம் ஓய்வு பெற்ற பிறகு ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புகிறது. ஜப்பான், Iruma Air Base-இல் அமைந்துள்ள மின்னணு போர்த் பிரிவின் கீழ் நான்கு EC-2 விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் ஜப்பான், சீனாவின் வலுவான வான்வழி பாதுகாப்பு வலையமைப்புகளுக்கு எதிராக தனது நிலையை வலுப்படுத்துகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire