இங்கிலாந்திடம் 6-4 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வியடைந்த பிரெஞ்சு அணி– எம்பாப்பே புதிய உலகக் கோப்பை சாதனை!!
19 ஆடி 2026 ஞாயிறு 07:30 | பார்வைகள் : 1151
உலகக் கோப்பைக்கான கால்பந்தாட்ட மூன்றாம் இடப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் பாதியில் 4-0 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்த பிரெஞ்சு அணி, இரண்டாம் பாதியில் அபாரமான மீள்வரவை வெளிப்படுத்தினாலும் இறுதியில் 6-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
முதல் பாதியில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரெஞ்சு அணி, இடைவேளைக்குப் பின்னர் பயிற்சியாளர் Didier Deschamps மேற்கொண்ட நான்கு மாற்றங்களால் தாக்குதல் ஆட்டத்தில் புத்துயிர் பெற்றது. இருப்பினும் தற்காப்பு பலவீனம் தொடர்ந்ததால் இங்கிலாந்தின் முன்னிலையை முறியடிக்க முடியவில்லை.
இரண்டாம் பாதியில் Kylian Mbappé இரண்டு கோல்கள் அடித்து, உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரராக புதிய சாதனையைப் படைத்தார். மேலும் Michael Olise ஒரே உலகக் கோப்பை தொடரில் அதிக கோல் வாய்ப்புகளை உருவாக்கிய வீரர் என்ற சாதனையை சமன் செய்தாலும், சமநிலைக் கோலைப் பெறும் முக்கியமான இரண்டு வாய்ப்புகளை தவறவிட்டார். Ousmane Dembélé, Bradley Barcola, Dayot Upamecano மற்றும் Lucas Digne ஆகியோரின் களமிறக்கம் பிரெஞ்சு அணியின் ஆட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக பார்கோலா ஒரு கோல் அடித்ததுடன், உபமேகானோ தற்காப்பிலும் தாக்குதலிலும் சிறப்பாக செயல்பட்டு டெம்பேலேவின் கோலுக்கும் உதவினார்.
மேலதிக நேரத்தில் பெல்லிங்காம் அடித்த கோல் இங்கிலாந்தின் வெற்றியை உறுதிப்படுத்தியது. Bukayo Saka மூன்று கோல்கள் அடித்து ஆட்டநாயகனாகத் திகழ்ந்தார். 1966ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றதற்குப் பிறகு இங்கிலாந்து அணியின் சிறந்த உலகக் கோப்பை சாதனையாக இந்த மூன்றாம் இடம் பதிவானது. தோல்வியுடன் டெஷாம்பின் 14 ஆண்டு கால பயிற்சியாளர் பொறுப்பு முடிவுக்கு வந்தாலும், கடைசி வரை போராடிய பிரெஞ்சு அணி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire