ஜேர்மனியில் பாதுகாப்பு எச்சரிக்கை உயர்வு...!
19 ஆடி 2026 ஞாயிறு 08:09 | பார்வைகள் : 307
ஜேர்மனி தனது தேசிய பாதுகாப்பு நிலையை abstract threat level என்ற நிலைமையிலிருந்து "அதிக அச்சுறுத்தல் நிலை" (high threat level) என உயர்த்தியுள்ளது.
ஜேர்மன் உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரிண்ட், சமீபத்தில் கிடைத்துவரும் உளவுத்துறை தகவல்கள் நாட்டில் தாக்குதல் திட்டங்கள் இருப்பதை தெளிவாக காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: "ஜேர்மனியில் எப்போதும் வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருக்கிறது. நம் நாட்டின் அடிப்படை அமைப்புகள், மக்கள் மற்றும் நிறுவனங்கள் மீது தாக்குதல் திட்டங்கள் தெளிவாகக் காணப்படுகின்றன." என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஜேர்மன் அமைச்சரவை ஆகஸ்ட் 13 அன்று உளவுத்துறை சட்டங்களில் பெரிய மாற்றங்களை பரிசீலிக்க உள்ளது.
புதிய சட்டங்கள் மூலம் உளவுத்துறை அதிகாரிகள் ஆபத்தான சூழ்நிலைகளில் நேரடியாக தலையீடு செய்ய அனுமதி பெறலாம். ஆனால் கைது செய்வது பொலிஸின் பொறுப்பாகவே இருக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் ஜேர்மனியில் பல்வேறு தாக்குதல்கள் நடந்துள்ளன. 2024-இல், சவுதி மருத்துவர் ஒருவர் கிறிஸ்துமஸ் சந்தையில் வாகனம் ஓட்டி ஆறு பேரை கொன்று நூற்றுக்கணக்கானவர்களை காயப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே ஆண்டில், சிரிய நாட்டு நபர் ஒருவர் "ஐ.எஸ்.ஐ.எஸ்" தாக்குதலால் மூன்று பேரை கொன்ற சம்பவமும் நடந்தது.
இந்தச் சம்பவங்கள் அனைத்தும் ஜேர்மனியின் பாதுகாப்பு நிலையை கடுமையாக உயர்த்தியுள்ளன. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire