அமெரிக்கா - ஈராக் இடையே கையெழுத்தான 48 முக்கிய ஒப்பந்தங்கள்
19 ஆடி 2026 ஞாயிறு 07:04 | பார்வைகள் : 320
அமெரிக்கா மற்றும் ஈராக் இடையே எண்ணெய் உற்பத்தி உள்ளிட்ட துறைகளின் கீழ் 48 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக் பிரதமர் அலி அல்-சைதி அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றார்.
தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை நேரில் சந்தித்த அவர் இருநாடுகள் இடையேயான முக்கிய உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஏற்கெனவே, முன்னாள் அதிபர் சதாம் உசேன் காலத்தில் நடைபெற்ற இராக் மீதான அமெரிக்காவின் போரினால் அந்நாடு கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதனால், வறுமை, ஊழல் போன்ற விவகாரங்களால் இராக் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இராக் ஆகிய நாடுகளின் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இடையே புரிந்துணர்வு, ஒத்துழைப்பு உள்பட 48 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக, இராக் பிரதமரின் அலுவலகம் இன்று (ஜூலை 18) அறிவித்துள்ளது.
இத்துடன், ஈராக்கின் எண்ணெய் மற்றும் மின்சார அமைச்சகத்துக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த எக்ஸான் மொபில், கேபிஆர், ஷெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
மேலும், இராக் மற்றும் சிரியா இடையில் கச்சா எண்ணெய் குழாய் தொடரை அமைப்பதற்கு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இதில், சர்வதேச செய்ற்கைக்கோள் தொலைத்தொடர்பில் முன்னணி வகிக்கும் தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் நிறுவனத்துடன் இராக் அரசு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்காவின் ஆதரவுடன் தொழிலதிபரான அலி அல்-சைதி கடந்த மே மாதம் இராக் நாட்டின் பிரதமராகப் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire