Paristamil Navigation Paristamil advert login

2027 தேர்தல் கருத்துக்கணிப்புகளை நம்ப வேண்டாம் – மக்ரோன்!!

2027 தேர்தல் கருத்துக்கணிப்புகளை நம்ப வேண்டாம் – மக்ரோன்!!

18 ஆடி 2026 சனி 21:12 | பார்வைகள் : 548


2027 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மரின் லு பென் வெற்றி பெறுவார் என்று கூறப்படும் கருத்துக்கணிப்புகளை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். ஜெர்மனியின் Brühl நகரில் சான்சலர் Friedrich Merzர நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

"கருத்துக்கணிப்புகளை மட்டும் நம்ப வேண்டாம். இறுதி முடிவை தீர்மானிப்பது மக்களே" என்று மக்ரோன் கூறினார். மேலும், பிரெஞ்சு மக்களை நம்ப வேண்டும்; அவர்களுக்கு எப்போதும் மோசமான முடிவுகளை முன்கூட்டியே கணிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

ஜெர்மன் சான்சலர் ஃபிரிட்ரிக் மெர்ஸ், பிரான்ஸ் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் நம்பிக்கையுடன் இணைந்து செயல்பட ஜெர்மனி தயாராக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இது மரின் லு பென்னுடனும் தேவையான ஒத்துழைப்பை வழங்கும் என்ற அவரது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

இரு தலைவர்களும் ஜெர்மனியில் நடைபெற்ற இருதரப்பு அமைச்சரவை கூட்டத்தில் ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தினர். மேலும், எதிர்கால வான்படை போர் அமைப்பு (SCAF) திட்டத்தில் ஏற்பட்ட சிக்கல்களைத் தாண்டி முன்னேற உறுதியும் தெரிவித்துள்ளனர்.