Paristamil Navigation Paristamil advert login

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்; நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்; நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்

19 ஆடி 2026 ஞாயிறு 10:16 | பார்வைகள் : 262


செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.,) யங் இந்தியன்ஸ் அமைப்பு சார்பில் எல்லைகளைத் தாண்டிய தொழில்முனைவு என்ற தலைப்பில்  தேசிய நிதித் தொழில் முனைவோர் உச்சிமாநாடு மதுரையில் நடந்தது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்ற  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது: இந்த தலை முறையினர் தயக்கத்தை தவிர்க்க வேண்டும். இன்று உங்களுக்கு அனைத்தும் இங்கு மிக எளிதாகி விட்டது. உங்களை என்ன தடுக்கிறது, எதற்காக தயக்கம். தொழில் செய்வதற்கான நாடு இந்தியா. எளிமையாக அணுக கூடிய அரசு உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு தொழில்களை வளர்க்கும் அமைப்பாக மாறியுள்ளது.

கடன் வழங்கி சிறு,குறு தொழில்நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கிறது. இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான அனைத்து தளங்களும் அனைத்து வாய்ப்புகளும் மத்திய அரசு ஏற்பாடு செய்து உள்ளது. இளம் தொழில் முனைவோர் தயக்கமின்றி தொழில் தொடங்க முன்வர வேண்டும் மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் கற்றுக்கொள்ள வேண்டும்' என்றார்.