Paristamil Navigation Paristamil advert login

Nudify ஆப்ஸ்களை நீக்க Google, Apple நிறுவனங்களுக்கு உத்தரவு

Nudify ஆப்ஸ்களை நீக்க Google, Apple நிறுவனங்களுக்கு உத்தரவு

18 ஆடி 2026 சனி 11:52 | பார்வைகள் : 140


அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ நகராட்சி, ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு, “Nudify” எனப்படும் செயலிகளை (Apps) தங்களது App Store-களில் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த செயலிகள், புகைப்படங்களை டிஜிட்டல் முறையில் மாற்றி, அதில் உள்ளவர்களை நிர்வாணமாக காட்டும் திறன் கொண்டவை.

காலிஃபோர்னியா சட்டப்படி, “அனுமதி இல்லாமல் உருவாக்கப்படும் deepfake p0rn” தொடர்பான எந்தச் செயலையும் ஊக்குவிப்பது குற்றமாகும். 2025-இல், பாதிக்கப்பட்டவர்கள் மூன்றாம் தரப்பினரை எதிர்த்து வழக்கு தொடரும் உரிமையும் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

சான் பிரான்சிஸ்கோ நகர சட்டத்தரணி டேவிட் சியூ, “ஆப்பிள் மற்றும் கூகுள், பெண்கள் மற்றும் சிறுமிகளை ஏமாற்றி, அனுமதி இல்லாத deepfake படங்களை உருவாக்கும் செயலிகளிலிருந்து லாபம் பெற்றுள்ளன. இவை உடனடியாக நீக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Tech Transparency Project (TTP) வெளியிட்ட அறிக்கைகளில், கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில், ஆப்பிள் மற்றும் கூகுள் தங்களது App Store-களில் டசன் கணக்கான Nudify செயலிகளை வைத்திருந்ததாகவும், அவற்றின் மூலம் “non-consensual intimate images” விற்பனை செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்பிள், “இந்த செயலிகள் எங்கள் App Store விதிமுறைகளுக்கு எதிரானவை. மூன்று செயலிகளை ஏற்கனவே நீக்கியுள்ளோம். மேலும் நான்கு செயலிகள் விதிகளை மீறினால் அவற்றையும் நீக்குவோம்” என்று தெரிவித்துள்ளது.

கூகுள், “குறிப்பிட்ட ஐந்து செயலிகள் Google Play-இல் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ‘Nudify’ போன்ற தேடல் சொற்களையும் தடை செய்துள்ளோம்” என்று தெரிவித்தது.

இந்த நடவடிக்கை, deepfake தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டை கட்டுப்படுத்தும் முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.