உலகக் கோப்பை இறுதிப் போட்டி! 19 ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படம்
18 ஆடி 2026 சனி 13:49 | பார்வைகள் : 267
19 ஆண்டுகளுக்கு முன்பு மெஸ்ஸியும், லாமின் யமாலும் இணைந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அது குறித்து மெஸ்ஸி தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
உலகம் எதிர்பார்த்து காத்திருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியும் ஸ்பெயின் அணியும் மோதவுள்ளன.
இந்த வேளையில், 19 ஆண்டுகளுக்கு முன்பு மெஸ்ஸியும், லாமின் யமாலும் இணைந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2007ம் ஆண்டு 20 வயது இளம் வீரராக பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த லியோனல் மெஸ்ஸி, Diario Sport என்ற பத்திரிக்கைகாக UNICEF தொண்டு நிறுவனத்தின் புகைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குழந்தையாக இருந்த லாமின் யாமலை குளிப்பாட்டும் புகைப்படம் தான் அது.
இந்நிலையில், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியின் நம்பிக்கை நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸிக்கும்(Lionel Messi), ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரமான லாமின் யமாலுக்கும்(Lamine Yamal) இடையிலான விளையாட்டை காண ஒட்டு மொத்த கால்பந்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
உலகக் கோப்பை கால்பந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நியூயார்க் நகரில் நடைபெற்ற பிஃபா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அர்ஜென்டினா அணியின் கால்பந்து வீரர் மெஸ்ஸி, அந்த புகைப்படம் நம்பமுடியததாக உள்ளது என்று தன்னுடைய வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் குழந்தையாக இருக்கும் போது அவருடன் நான் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். இன்று அவருக்கு எதிராக கால்பந்து உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளேன் என்பது விசித்திரமாக (Crazy) உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் 19 வயது லாமின் யமாலை உலகத் தரம் வாய்ந்த மிகச் சிறந்த வீரர் என்று குறிப்பிட்ட மெஸ்ஸி அவருக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
இறுதிப் போட்டியில் அவரை சிறப்பாக விளையாட விடாமல் தடுப்பதே எங்கள் நோக்கம் என்றும், ஸ்பெயின் அணியில் பல சிறந்த வீரர்கள் உள்ளார்கள். இருப்பினும் அவர்களை தடுக்க எங்களிடம் பல ஆயுதங்கள் இருப்பதாகவும் மெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் யாமலின் எதிர்காலம் சிறப்பானதாக அமையட்டும் என்று வாழ்த்திய மெஸ்ஸி, இந்த முறை அவருக்கு கோப்பை கிடைக்காமல் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றும் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire