ஜிம்பாப்வேவுக்கு பதிலடி கொடுத்த வங்காளதேச அணி! மொத்தமாக சரித்த இருவர்
18 ஆடி 2026 சனி 07:47 | பார்வைகள் : 131
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், வங்காளதேசம் 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
புலவாயோவில் வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நடந்தது.
முதலில் ஆடிய வங்காளதேசம் 20 ஓவர்களில் 186 ஓட்டங்கள் குவித்தது. தன்ஸித் ஹசன் 58 ஓட்டங்களும், சைப் ஹசன் 55 ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 19.4 ஓவர்களில் 152 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ரியான் பர்ல் 29 (19) ஓட்டங்களும், சிக்கந்தர் ரஸா 28 (12) ஓட்டங்களும் எடுத்தனர்.
அபாரமாக பந்துவீசிய ரிஷாத் ஹொசைன் (Rishad Hossain) 4 விக்கெட்டுகளும், மஹெதி ஹசன் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
வங்காளதேச அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire