Paristamil Navigation Paristamil advert login

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கடும் வீழ்ச்சி

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கடும் வீழ்ச்சி

18 ஆடி 2026 சனி 10:31 | பார்வைகள் : 1624


உலகின் மிக முக்கியமான கடல்சார் வர்த்தக வழித்தடங்களில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை வழியாக கடந்த 24 மணித்தியாலங்களில் ஆறு கப்பல்கள் மட்டுமே பயணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வெளியான தகவல்களின்படி, இரண்டு சரக்குக் கப்பல்களும் ஒரு எண்ணெய் விநியோகக் கப்பலும் ஹோர்முஸ் நீரிணையை விட்டு வெளியேறியுள்ளன.

இரண்டு எண்ணெய் விநியோகக் கப்பல்களும் ஒரு சரக்குக் கப்பலும் அந்த நீரிணைக்குள் நுழைந்துள்ளன.

கடந்த சில நாட்களாக இந்த முக்கிய கடல்வழியில் கப்பல்களின் போக்குவரத்து குறைந்து வருவதாகவும், அண்மைய கடப்பு விகிதங்களுடன் இந்த புள்ளிவிவரங்கள் ஒத்துப்போவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கொண்டு செல்லப்படும் அனைத்து சரக்குகளுக்கும் 20 சதவீத கட்டணம் (Fee) விதிக்கும் திட்டத்தை அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பும் அப்பகுதியில் கப்பல் போக்குவரத்து மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.