Paristamil Navigation Paristamil advert login

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் தண்டனை!

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் தண்டனை!

18 ஆடி 2026 சனி 08:33 | பார்வைகள் : 136


வந்தே மாதரம் பாடலை அவமதிப்பவர்கள்,  அதற்கு இடையூறு செய்வர்களுக்கு தண்டனை வழங்கும் மசோதா பார்லி. கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பார்லி மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்குகிறது. ஆக.13ம் தேதி வரை  நடக்கிறது. இந்த கூட்டத்தொடரின் போது, வந்தே மாதரம் பாடலை அவமதிப்பவர்கள், அதை பாடும்போது அதற்கு இடையூறு செய்பவர்களுக்கு தண்டனை அளிக்கும் புதிய மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. கூட்டத்தொடரின் முதல் நாளில், மசோதா அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டால் வந்தே மாதரம் பாடலை அவமதிக்கும் செயல்கள், நடவடிக்கைகள் குற்றமாக கருதப்படும். மேலும், தேசபற்றை வலுப்படுத்துவதோடு, தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் ஒரு அம்சமாகவும் இருக்கும்.

முன்னதாக, மத்திய அமைச்சரவையானது, தேசிய கவுரவ அவமதிப்பு திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.