பல சவால்களுக்கும் இந்தியா பதில் அளிக்கிறது; பிரதமர் மோடி பெருமிதம்
18 ஆடி 2026 சனி 07:30 | பார்வைகள் : 129
மேற்காசிய போரின்போது இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை. பல சவால்களுக்கும் இந்தியா பதில் அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஹரியானாவில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த பிறகு பிரதமர் மோடி பேசியதாவது: ஜிந்த் எனும் இந்த இடத்தின் புனித மண்ணில் இருப்பதால் என் இதயம் ஆனந்தத்தால் நிறைந்து உள்ளது. இது ஒரு சாதாரண பூமி அல்ல. இது வரலாறு, வீரம் மற்றும் மகிம நிறைந்த பூமி. 20ம் நூற்றாண்டு டீசல் மற்றும் மின்சார ரயில்களின் காலமாக திகழ்ந்தது. 21ம் நூற்றாண்டின் ரயில்கள் ஹைட்ரஜன் மூலம் இயக்கப்படுகின்றன.
ஹைட்ரஜன் ரயில் சேவை நாட்டிற்கு மிக உந்து சக்தியாக இருக்கும்; டீசலை நம்பி இருந்த நிலை மாறியுள்ளது. டீசலை நம்பி இருந்தால் ரயில்கள் நிறுத்தப்பட்டிருக்கும். மேற்காசிய போரின்போது இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை. தற்போது 99 சதவீதம் மின்சார ரயில் பயன்பாட்டுக்கு மாறியுள்ளோம். பல சவால்களுக்கும் இந்தியா பதில் அளிக்கிறது. ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயிலை இயக்கும் திறன் கொண்ட 3-4 நாடுகள் மட்டுமே உலகம் முழுவதும் உள்ளன.
இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட இந்த ரயில் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது, இது ரயில்வே மற்றும் தொழில்நுட்ப துறையில் நாட்டின் வளர்ந்து வரும் திறன்களை பிரதிபலிக்கிறது. உங்கள் அனைவருக்கும் தெரியும். சில நாட்களுக்கு முன்புதான் நான் இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கான எனது பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பினேன். அங்கு இந்தியா பல வகையான ஒப்பந்தங்களை மேற்கொண்டது.
குறிப்பாக ஹரியானாவின் இளைஞர்களோடும் தொடர்புடையது; அதுதான் விளையாட்டு. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் அரசுகளுடன் விளையாட்டுத் துறை குறித்து நான் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தினேன். இவ்விரு நாடுகளுடனும் இணைந்து, விளையாட்டுத் துறை மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி போன்ற விஷயங்களில் வரும் காலங்களில் நாங்கள் இணைந்து பல பணிகளைச் செய்யவிருக்கிறோம். இது ஹரியானா இளைஞர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire