உலகிலேயே மிகவும் எடை குறைவான இரண்டுவகை சாட்டிலைட்டை கண்டுபிடிப்பு!
28 மார்கழி 2020 திங்கள் 07:45 | பார்வைகள் : 14870
உலகிலேயே மிகவும் எடை குறைவான இரண்டுவகை சாட்டிலைட்டை தஞ்சை மாணவர் கண்டுபிடித்துள்ளார்.
தஞ்சையை அடுத்த கரந்தை பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவர் ரியாஸ்தீன். இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் மெக்கட்ரானிக்ஸ் படித்து வருகிறார்.
இவர் அமெரிக்காவை சேர்ந்த I Doodle Learning நிறுவனம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி கழகமான நாசா உடன் இணைந்து ஆண்டுதோறும் நடத்தும் cubes in space என்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில், 2019-2020 -ல் கலந்து கொண்டு தேர்வாகியுள்ளார்.
இவர் கண்டுபிடித்த இரண்டு Femto சாட்டிலைட்களும் நாசாவில் இருந்து, வரும் 2021ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட உள்ளது.
73 நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்ட இந்த கண்டுபிடிப்புகளுக்கான போட்டிகளில் இரண்டு சாட்டிலைட்டுகளை வடிவமைத்து நாசாவிலிருந்து ஏவ இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ரியாஸ்தீன் தேர்வாகியுள்ளார்.
இந்த சாட்டிலைட்களுக்கு விஷன் சாட் V1 மற்றும் V2 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த இரு சாட்டிலைட்டுகளும் 37mm உயரமுடையது மற்றும் 33 கிராம் எடையுடையது.
இவைதான் உலகிலேயே மிகவும் எடை குறைவான பெம்டோ செயற்கைக்கோள்கள் ஆகும். இந்த இரு சாட்டிலைட்களும் பாலி எதரி இமைடு அல்டம் என சொல்லக்கூடிய தெர்மோ பிளாஸ்டிக்கால், 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தைக்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை இரண்டுமே தொழில்நுட்ப சோதனை செயற்கைக்கோள்கள். சாட்டிலைட் நோக்கமானது Atmospheric and space studies and microgravity material research.
இதில் 11 சென்சார்கள் உள்ளன. அதன்மூலம் 17 parameter-களை கண்டறிய முடியும். இவை இரண்டும் 2021ம் ஆண்டு ஜூன் மாதம் நாசாவில் சவுண்டிங் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளதாக மாணவர் ரியாஸ்தீன் தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan