Paristamil Navigation Paristamil advert login

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக லண்டன் கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக லண்டன் கவனயீர்ப்பு போராட்டம்

23 வைகாசி 2026 சனி 15:06 | பார்வைகள் : 330


வலி சுமந்த மே மாதத்தில் புலம்பெயர் நாடுகளில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழினப்படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை முன்னிட்டு “தமிழின அழிப்பு நினைவு நாள்” பேரணியும் கவனயீர்ப்பும் அண்மையில் லண்டனில் நடைபெற்றது.

இதன்போது தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலையை உலக நாடுகளுக்கு மீண்டும் நினைவூட்டும் நோக்கில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

பிரித்தானிய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் Parliament Square பகுதியில் ஆரம்பமாகியதுடன், Westminster Underground station அருகில் மக்கள் ஒன்று கூடியதைத் தொடர்ந்து Downing Street நோக்கி பேரணி முன்னெடுக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் 2009 இனப்படுகொலையில் உயிரிழந்த தமிழர்களை நினைவுகூரும் வகையில் பலர் கலந்து கொண்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியதுடன், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பினர்.

இந்த பேரணியை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியா மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு ஐக்கிய இராச்சியம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது 

img_6a11a6154cbeb.jpgimg_6a11a60ad008c.jpg