அரசன் படத்தின் ரிலீஸ் தேதி என்ன தெரியுமா?
23 வைகாசி 2026 சனி 14:42 | பார்வைகள் : 198
இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாகும் புதிய படம் 'அரசன்'. 'வடசென்னை' யூனிவர்ஸின் ஒரு பகுதியாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய் சேதுபதியும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தென்னிந்திய சினிமாவில் அதிக ரசிகர்களைக் கொண்ட இயக்குநர்களில் வெற்றிமாறன் முக்கியமானவர். 'ஆடுகளம்', 'வடசென்னை', 'அசுரன்', 'விசாரணை', 'விடுதலை' என இந்திய சினிமாவுக்குப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் வெற்றிமாறன்.
இப்போது சிம்புவை ஹீரோவாக வைத்து அவர் படம் இயக்குவதால், தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 'வடசென்னை' இரண்டாம் பாகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு, 'அரசன்' படம் ஒரு பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார். மீண்டும் வடசென்னை தாதாக்கள் கதையை வெற்றிமாறன் கையில் எடுத்திருப்பதால், தமிழ் சினிமாவில் இது ஒரு புதிய ஃபிலிம் ஃபிரான்சைஸாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படம் மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில், தத்ரூபமான கதைக்களத்துடன் உருவாகும் என்றும் கூறப்படுகிறது. கௌதம் மேனன் இயக்கிய 'வெந்து தணிந்தது காடு' (2022) படத்தின் வெற்றிக்குப் பிறகு, பத்து தல, தக் லைஃப் என அடுத்தடுத்து இரண்டு பிளாப் படங்களை கொடுத்த சிம்பு, ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். வெற்றிமாறனின் ரியலிஸ்டிக் கதை சொல்லும் பாணியில் சிம்புவைக் காண அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்கிடையில், வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக விஜய் சேதுபதி நடித்த 'விடுதலை பார்ட் 2' வெளியானது. சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், அரசன் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி மாஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி அரசன் படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடைந்துவிடும் என்பதால், அப்படத்தை இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசன் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் மூலம் சிம்புவும், அனிருத்தும் முதன்முறையாக இணைந்து பணியாற்றுகின்றனர். அதுமட்டுமின்றி அனிருத், வெற்றிமாறன் படத்திற்கு இசையமைப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan