ரஷ்யாவின் துறைமுகத்தில் உள்ள எண்ணெய் கிடங்கில் ட்ரோன் தாக்குதல்
23 வைகாசி 2026 சனி 12:49 | பார்வைகள் : 187
ரஷ்யாவின் துறைமுகத்தில் உள்ள எண்ணெய் கிடங்கில் ட்ரோன் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டது.
தெற்கு ரஷ்யாவின் நோவோரோசிஸ்க் துறைமுகத்தில் எண்ணெய் கிடங்கு உள்ளது. இது நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் ஐந்தில் ஒரு பங்கைக் கையாளுகிறது.
இதனால் இது கருங்கடலில் ரஷ்யாவின் மிகப்பெரிய ஏற்றுமதி மையமாகவும் உள்ளது.
ரஷ்யாவின் எண்ணெய் வருவாயைக் குறைக்கும் நோக்கில் உக்ரைன் பாரிய ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் நோவோரோசிஸ்க் எண்ணெய் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மேயர் ஆண்ட்ரே கிராவ்சென்கோ கூறுகையில், "விழுந்த ட்ரோன் விமானத்தின் பாகங்கள் காரணமாக எண்ணெய் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. பல தொழில்நுட்ப மற்றும் நிர்வாகக் கட்டிடங்களில் தீப்பிடித்தது. ட்ரோன் விமானங்களின் பாகங்கள் எரிபொருள் முனைய வளாகத்திலும் விழுந்தன. இதில் இருவர் காயமடைந்தனர்" என்றார்.
இதற்கிடையில், ஒரே இரவில் உக்ரைனில் இருந்து வந்த மொத்தம் 348 ட்ரோன் விமானங்களை ரஷ்யாவின் வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்ததாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் எரிசக்தி ஆலைகளைக் குறிவைத்து தொலைதூரத் தாக்குதல்களை நடத்துவதாக கீவ் கூறுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan