Paristamil Navigation Paristamil advert login

முதல்வர் விஜயுடன் மு.க.அழகிரி மகள் சந்திப்பு

முதல்வர் விஜயுடன் மு.க.அழகிரி மகள் சந்திப்பு

23 வைகாசி 2026 சனி 13:31 | பார்வைகள் : 241


முதல்வர் விஜயை, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் சகோதரர் அழகிரி, தி.மு.க.,வில் தென்மண்டல அமைப்பு செயலராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்தவர். தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டதால், கட்சி பணிகளில் இருந்து, அவர் ஒதுங்கி இருக்கிறார்.

சமீபத்திய சட்டசபை தேர்தலில், தி.மு.க., தோல்வி அடைந்து, த.வெ.க., ஆட்சி அமைந்துள்ளது. முதல்வராக பொறுப்பேற்ற விஜய்க்கு, அழகிரியின் மகள் கயல்விழி, ஏற்கனவே வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் விஜயை, நேற்று கயல்விழி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது, த.வெ.க.,வில் இணைய, கயல்விழி விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள, மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலில், த.வெ.க., சார்பில் போட்டியிட கயல்விழி விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.