Paristamil Navigation Paristamil advert login

பொருளாதார, கல்வி ரீதியாக முன்னேறியவர்களின் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு ஏன்? சுப்ரீம் கோர்ட்

பொருளாதார, கல்வி ரீதியாக முன்னேறியவர்களின் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு ஏன்? சுப்ரீம் கோர்ட்

23 வைகாசி 2026 சனி 10:33 | பார்வைகள் : 123


பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பொருளாதார மற்றும் கல்வி ரீதியாக முன்னேறிய குடும்பங்களின் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது ஏன் என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது

கர்நாடகாவில் அரசு ஊழியராக இருக்கும் பெற்றோர்களின் குழந்தைக்கு இட ஒதுக்கீட்டில் இருந்து விலக்கு அளித்ததை கர்நாடக ஐகோர்ட் உறுதி செய்தது..

இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த  சுப்ரீம் கோர்ட் நீதிபதி  பிவி நாகரத்னா மற்றும் உஜால் புயான் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டின் மூலம் சமூக முன்னேற்றம் சாத்தியமாகும். பெற்றோர் இருவரும் ஐஏஎஸ் அதிகாரிகளாக இருந்தால், அவர்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

குழந்தைகளுக்கு மீண்டும்   இட ஒதுக்கீடு கோருவதன் மூலம், நாம் அதிலிருந்து ஒருபோதும் விடுபட முடியாது. பெற்றோர்கள் நல்ல வேலையில் இருந்து, நல்ல சம்பளம் பெற்றால்,  மாணவர்கள் இட ஒதுக்கீட்டில் இருந்து விலக்கப்பட வேண்டும். இதுபோன்ற  வசதியான பிரிவினரை இட ஒதுக்கீட்டுப் பலன்களில் இருந்து விலக்குவதற்கு அரசால், பிறப்பிக்கப்பட்ட பல உத்தரவுகள் வழிவகுக்கின்றன. ஆனால், அவற்றுக்கு எதிராக இகுப்போது வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.