100க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் ரத்து; தமிழக அரசு அறிவிப்பு
23 வைகாசி 2026 சனி 06:15 | பார்வைகள் : 186
100க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் ஊரக உள்ளாட்சித்துறையில் அண்மையில் ஒரு டெண்டர் கோரப்பட்டு இருந்தது. அன்றைய தினம் மாலையிலே அதாவது 6 மணி நேரத்தில் இந்த இ டெண்டர் திறக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது.
6 மணிநேரத்தில் முடிந்த இந்த குறுகிய கால டெண்டர் விவகாரம் தமிழக அளவில் பெரும் பேசு பொருளாக மாறியது. மேலும் கடுமையான விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டன. இதேபோன்று பல்வேறு துறைகளிலும் குறுகிய கால டெண்டர்கள் கோரப்பட்டன. இதையடுத்து, மாநகராட்சி, ஊரக வளர்ச்சித் துறையில் குறுகிய கால டெண்டர்கள் வெளியிட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந் நிலையில், 100க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக மே 13ம் தேதி முதல் 22ம் தேதி வரை போக்குவரத்து, பொதுப்பணி, நகர்ப்பற வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல துறைகளின் சார்பில் வெளியிடப்பட்ட டெண்டர்கள் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan