லீக்கேஜ் சரி செய்தால் போதும்; இதுதான் முதல்வர் விஜய்யின் கனவு! செங்கோட்டையன்
23 வைகாசி 2026 சனி 05:14 | பார்வைகள் : 182
லீக்கேஜ் சரி செய்தால் போதும்; நிதி சிந்தாமல் சிதறாமல், துறையின் சார்பாக செயல்படுகிற போது, குறைகள் நிவர்த்தி செய்யப்படும். இது தான் முதல்வர் விஜய்யின் கனவு என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இலாகா மாற்றப்பட்ட பின் முதன்முறையாக மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார். பிறகு, நிருபர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது: தமிழகத்தில் ஆற்றல் கொண்டு வர வேண்டும் என்பதுதான் முதலவர் விஜய்யின் எண்ணமாக இருக்கிறது.
இந்த அரசு என்ன செய்ய போகிறது என்று சிலர் கேட்க கூடும். எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பது என்பதில் நீங்கள் எல்லோரும் பார்க்கிறீர்கள். நாளொன்றுக்கு ஒரு அறிவிப்பை பார்க்கும் போது மக்கள் மற்றும் விவசாயிகள் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் தான் அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
12ம் வகுப்பு மாணவர்களின் உயர்கல்விக்கு தேவைப்படும் சான்றிதழ்கள் பள்ளிகளிலேயே வழங்கப்படும். வருமான, இருப்பிட சான்றிதழ் அந்தந்த பள்ளியிலேயே வழங்க சிறப்பு முகாம்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். நிதித்துறை பல்வேறு ஆலோசனைகளை சொல்வார்கள். எங்கெங்கே லீக்கேஜ் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியும்.
லீக்கேஜ் சரி செய்தால் போதும்; நிதி சிந்தாமல் சிதறாமல், துறையின் சார்பாக செயல்படுகிற போது, குறைகள் நிவர்த்தி செய்யப்படும். இது தான் முதல்வர் விஜய்யின் கனவு. இதை தான் முதல்வர் விரும்புகிறார். நாங்கள் அந்தந்த துறையின் சார்பாக இதை நிறைவேற்றுவோம். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan