Paristamil Navigation Paristamil advert login

100 கி.மீ., இலக்கை துல்லியமாக தாக்கும் வாயு அஸ்த்ரா-1 ஏவுகணை சோதனை வெற்றி

100 கி.மீ., இலக்கை துல்லியமாக தாக்கும் வாயு அஸ்த்ரா-1 ஏவுகணை சோதனை வெற்றி

22 வைகாசி 2026 வெள்ளி 12:06 | பார்வைகள் : 173


உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வாயு அஸ்த்ரா-1 ஏவுகணை சோதனையை புனேவைச் சேர்ந்த பாதுகாப்புத் தொழில்நுட்ப நிறுவனமான நிபே லிமிடெட் வெற்றிகரமாக செய்து முடித்தது. இது இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட இருக்கிறது.

ராஜஸ்தானில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 10 கிலோ எடை கொண்ட ஏவுகணை சுமார் 100 கிலோ மீட்டர் பறந்து சென்று இலக்கை துல்லியமாக தாக்கி அழித்துள்ளது. சோதனையின் போது தாக்குதலை நடுவிலேயே ரத்து செய்யவும், மீண்டும் திருப்பி தாக்கும் திறன்களை கொண்டுள்ளது.

தரைக்கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து 70 கி.மீ தொலைவில் உள்ள மற்றொரு முன்களக் கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு ஏவுகணையின் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டை மாற்றும் திறன் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

உத்தரகண்டின் ஜோஷிமத் பகுதியில் ஏவுகணையின் தொழில்நுட்ப மற்றும் உயர் மலைப்பகுதி சோதனைகள் நடத்தப்பட்டன. 14,000 அடிக்கும் அதிகமான உயரத்தில், 90 நிமிடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து பறந்து ஏவுகணையின் நீண்ட நேரத் திறன் சோதனை செய்து பார்க்கப்பட்டது. முக்கியமாக, இலக்கை துல்லியமாக தாக்கி அழித்த பிறகு, இந்த ஏவுகணை மீண்டும் பயன்படுத்தும் திறனை கொண்டது.

முன்னதாக, மே 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சூர்யஸ்த்ரா ராக்கெட்டுகளின் ஏவுதல் சோதனைகளை இந்த நிறுவனம் வெற்றிகரமாக நடத்தியது. இந்த ராக்கெட்டுகள் 150 கி.மீ மற்றும் 300 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் வரம்பைக்  கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.