இணையத்தில் பெரிதும் கவனம் ஈர்த்துவரும் திருமணம்
21 வைகாசி 2026 வியாழன் 16:27 | பார்வைகள் : 147
பிரித்தானியாவில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமணம் இணையத்தில் பெரிதும் கவனம் ஈர்த்துவருகிறது.
அதற்குக் காரணம், அந்த மணப்பெண்ணும், அவரது தந்தையும்
அந்த மணப்பெண்ணின் பெயர், வெனிசுலா ஃப்யூரி. அவர் பிரபல பிரித்தானிய குத்துச்சண்டை வீரரான டைசன் ஃப்யூரியின் மகள் என்பதுதான் அந்தத் திருமணம் பெரிதும் கவனம் ஈர்க்க முதல் காரணம்.
டைசன் ஃப்யூரி ஒரு கோடீஸ்வரர் ஆவார். அத்துடன், வெனிசுலாவின் திருமணம் கவனம் ஈர்க்க இன்னொரு காரணம், அவருக்கு வயது 16 மட்டுமே.
ஆக, இவ்வளவு சிறிய வயதில் திருமணம் செய்துகொண்டதால் வெனிசுலாவின் திருமணம் கவனம் ஈர்த்துள்ளது. விடயம் என்னவென்றால், வெனிசுலாவின் பெற்றோரும் தங்கள் பதின்மவயதில்தான் திருமணம் செய்துகொண்டார்களாம்.
ஆடம்பரமாக வெனிசுலாவின் திருமணம் நடந்து முடிய, அடுத்ததாக ஒரு செய்தி வேகமாகப் பரவத் துவங்கியது.
கோடீஸ்வர வாரிசான வெனிசுலாவும், அவரது கணவரான நோவா ப்ரைஸும் (19), இனி ஒரு ஆடம்பர கேரவனில்தான் வாழ்க்கையைத் தொடர இருக்கிறார்கள் என்னும் செய்தி பரவ, அதற்கு விளக்கமளித்துள்ளார் வெனிசுலா.
நாங்கள் வாழ்ப்போவது கேரவனில் அல்ல, அது ஒரு தனி வீடு, chalet என்னும் தனி வீட்டில்தான் நாங்கள் வாழ்ப்போகிறோமே தவிர, கேரவனில் அல்ல என விளக்கமளித்துள்ளார் வெனிசுலா.
எந்த பிரித்தானிய பத்திரிகையை எடுத்தாலும், அதில் வெனிசுலாவின் திருமணம் குறித்த ஒரு செய்தியாவது இடம் பெறாமல் இல்லை. அந்த அளவுக்கு கவனம் ஈர்த்துவருகிறது வெனிசுலாவின் திருமணம்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan