Paristamil Navigation Paristamil advert login

அடுத்த சில நாட்களில் 35°C வரை கடும் வெப்பம் எதிர்பார்ப்பு!!

அடுத்த சில நாட்களில் 35°C வரை கடும் வெப்பம் எதிர்பார்ப்பு!!

20 வைகாசி 2026 புதன் 07:30 | பார்வைகள் : 190


கடந்த சில நாட்களாக நிலவிய குளிர்ச்சியும் மழையும் குறைந்து, அடுத்த சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் கடும் வெப்ப அலை வீசும் என Météo-France அறிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் வெப்பநிலை 35 செல்சியஸ் வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருவத்திற்கே அசாதாரணமான இந்த வெப்பநிலை, பல இடங்களில் புதிய சாதனைகளை உருவாக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட ஆபிரிக்காவிலிருந்து சூடான காற்று பிரான்ஸை நோக்கி நகர்வதன் காரணமாக, வியாழக்கிழமை முதல் வெப்பநிலை திடீரென அதிகரிக்கவுள்ளது. Nouvelle-Aquitaine, Landes மற்றும் Pays Basque உள்ளிட்ட பகுதிகளில் 30°C முதல் 35°C வரை வெப்பம் பதிவாகலாம். Bordeaux மற்றும் Biarritz நகரங்களிலும் 33°C வரை வெப்பம் உயர வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், Brittany உள்ளிட்ட வடமேற்கு பிராந்தியங்களிலும் 30°C வரை வெப்பநிலை பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. Pentecôte வார இறுதி வரை பெரும்பாலும் வெயிலான வானிலை தொடரும் என கூறப்பட்டாலும், சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.