Hauts-de-Seine மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய போர் விமானங்கள்!!
19 வைகாசி 2026 செவ்வாய் 06:05 | பார்வைகள் : 3097
நேற்று, மே 18, திங்கட்கிழமை காலை 92 ஆம் மாவட்ட (Hauts-de-Seine) மக்களின் வீடுகளுக்கு மேல் திடீரென போர் விமானங்கள் பறந்து, மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கின.
காலை 10 மணி அளவில் மிக தாழ்வாக பறந்த இந்த ரஃபேல் வகை போர் விமானங்களின் ஒலி வீடுகளை அதிரச் செய்தது. பிரெஞ்சு இராணுவ விமானங்கள் தாழ்வாக வட்டமடித்ததை அடுத்து, போர் சூழல் ஏற்படும் ஒரு அச்சத்தை மக்களிடம் தோற்றுவித்தது.
ஆனால், உண்மை என்னவென்ற பிரெஞ்சு இராணுவ கட்டளைப்பணியத்திடம் கேட்டறிந்தோம்.
இது ஒரு ஒத்திகை நிகழ்வு எனவும், இம்மாதம் 24 ஆம் திகதி Hauts-de-Seine மாவட்டத்தின் Marnes-La-Coquette நகரில் இடம்பெற உள்ள 'ஒரு' நினைவு தினத்திற்கான ஏற்பாடுகளின் ஒரு அங்கம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
பரிசின் மேற்கு புறநகரான Marnes-La-Coquette இல், வரும் 24 ஆம் திகதி இந்த நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட உள்ளது. முதலாம் உலகப்போரின் போது பிரான்சுக்கான, பிரெஞ்சு சீருடை அணிந்த அமெரிக்க வீரர்கள் தங்களது இன்னுயிரை தியாகம் செய்தமையை நினைவுகூரும் வகையில் இந்த நினைவுதினம் கொண்டாடப்பட உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan