கட்சியில் பிளவு: த.வெ.க., பக்கம் தாவும் அ.தி.மு.க.,வினர்
16 வைகாசி 2026 சனி 12:36 | பார்வைகள் : 1198
அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டதால், அக்கட்சி நிர்வாகிகள் பலர், ஆளுங்கட்சியான த.வெ.க., பக்கம் தாவி வருகின்றனர்.
அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி அணி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சண்முகம், வேலுமணி அணி என இரண்டு பிரிவாக செயல்படுகிறது.
வேலுமணி அணியை சேர்ந்த, ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலர் ராமலிங்கம் நீக்கப்பட்டார். இந்நிலையில், அவர் தலைமையில், ஈரோடு பகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள், அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் நேற்று முன்தினம் இரவு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இதுபோல, தி.மு.க., தொண்டரணி மாநில இணை செயலர் காயத்ரி சீனிவாஸ், நேற்று அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து, த.வெ.க.,வில் இணைந்தார். அவருடன் தி.மு.க, பகுதி செயலர், ஒன்றிய செயலர்கள் என பலர் த.வெ.க.,வில் இணைந்து உள்ளனர்.
இதற்கிடையே, தமிழகத்தில் ஆளுங்கட்சியாக த.வெ.க., உள்ளதால், உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து, திருப்பூரில் உள்ள, தி.மு.க. - அ.தி.மு.க. - பா.ஜ. உள்ளிட்ட பிரதான கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், முன்னாள் கவுன்சிலர்கள் உள்ளிட்டோர், த.வெ.க-வில் இணைய தொடங்கியுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan