தனுஷ் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் யாத்ரா.?
16 ஆனி 2026 செவ்வாய் 16:13 | பார்வைகள் : 162
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது கைவசம் அரை டஜன் படங்களோடு பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக கர திரைப்படம் ரிலீஸ் ஆனது. கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆன கர திரைப்படம் பெரியளவில் சோபிக்காமல் தோல்வியை தழுவியது. கர படத்தின் தோல்வியை அடுத்து, தனுஷ் நடிப்பில் ஒரு பிரம்மாண்ட படம் தயாராகி வருகிறது. அப்படத்தை அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். அப்படத்தில் தனுஷ் உடன் மம்மூட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நடிப்பில் மட்டுமின்றி டைரக்ஷனிலும் பிசியாக இருக்கிறார் தனுஷ். அவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு இட்லி கடை, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனது. இந்த இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பை பெற்றன. இதனால் ஒரு இயக்குநராக கம்பேக் கொடுக்க வேண்டும் என ஆவலோடு காத்திருக்கிறார் தனுஷ். இந்த நிலையில், அவர் இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த படம் பற்றிய அப்டேட் கசிந்துள்ளது. மேலும் அப்படத்தில் யார் நடிக்க உள்ளார்கள் என்கிற விவரமும் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.அதன்படி தனுஷ் அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் அவரது மூத்த மகன் யாத்ரா தான் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். அப்படத்தை தனுஷின் டி55 படத்தின் தயாரிப்பு நிறுவனமான R டேக் சினிமாஸ் தயாரிக்க உள்ளதாம். அப்படம் ஒரு மாஸ் கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாக உள்ளதாம். அப்படத்திற்கு வேல்ராஜ் தான் ஒளிப்பதிவு செய்ய உள்ளாராம். அதுமட்டுமின்றி ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைக்க உள்ளார். அப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
யாத்ரா - தனுஷ் கூட்டணியில் உருவாக உள்ள படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ தொடங்கப்பட வாய்ப்பு உள்ளது. தனுஷ் இதற்கு முன்னதாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் மூலம் தன்னுடைய அக்கா மகன் பவிஷை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அதேபோல் தற்போது தனது இயக்கத்திலேயே தன்னுடைய மகன் யாத்ராவை ஹீரோவாக களமிறக்க இருக்கிறார் தனுஷ். இப்படத்தில் மேலும் சில நட்சத்திரங்கள் நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan