மீண்டும் ஆரம்பமாகும் சேயோன்’ படத்தின் படப்பிடிப்பு?
15 ஆனி 2026 திங்கள் 13:29 | பார்வைகள் : 1151
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘தாய் கிழவி’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பாக்ய ஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துவருகிறார். மேலும் ரச்சில் ரெபேக்கா, அருள் தாஸ் மற்றும் பால சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் ‘சேயோன்’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரை மாவட்டத்தின் உசிலம்பட்டி பகுதியில் 24 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. தற்போது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ஜூலை மாதத்தில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும், ஜூலை மாதத்திற்குள் முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்ய வேண்டும் என்ற இலக்குடன் தயாரிப்பு குழு செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Annonces
Ajouter
Annuaire