24 பந்தில் 58 விளாசிய தசுன் ஷானகா! மேற்கிந்திய தீவுகளை பந்தாடிய இலங்கை அணி
14 ஆனி 2026 ஞாயிறு 13:35 | பார்வைகள் : 151
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இலங்கை அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இலங்கை, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி ஜமைக்காவில் நடந்தது.
முதலில் ஆடிய இலங்கை அணி 194 ஓட்டங்கள் குவித்தது. கமில் மிஷாரா 40 பந்துகளில் 61 ஓட்டங்களும், தசுன் ஷானகா 24 பந்துகளில் 58 ஓட்டங்களும் விளாசினர். ஷாமர் ஜோஸப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 18.1 ஓவர்களில் 157 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, இலங்கை அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக ரோவ்மன் பௌல் 43 (26) ஓட்டங்களும், ஹெட்மையர் 36 (26) ஓட்டங்களும் எடுத்தனர்.
இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப்போட்டி நாளை கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan