FIFA 2026 - சமநிலையில் முடிந்த கனடா மற்றும் பொஸ்னியா இடையிலான போட்டி
13 ஆனி 2026 சனி 11:00 | பார்வைகள் : 1156
2026 பிபா (FIFA) உலகக் கிண்ண கால்பந்து தொடரில், தொடரை நடத்தும் நாடான கனடா மற்றும் பொஸ்னியா-ஹெர்சகோவினா (Bosnia and Herzegovina) அணிகளுக்கு இடையே நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் (Draw) முடிவடைந்துள்ளது.
போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் மிகவும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், ஒன்றுக்கொன்று சளைக்காமல் சமபலத்துடன் மோதிக்கொண்டன.
மைதானத்தில் இரு நாட்டு வீரர்களும் காட்டிய அதிரடி ஆட்டம் ரசிகர்களைக் பெரிதும் கவர்ந்தது.
இருப்பினும், இந்த போட்டி வெற்றி-தோல்வியின்றி சமநிலையில் முடிந்ததன் காரணமாக, போட்டிக்குரிய புள்ளிப் பட்டியலின் புள்ளிகள் இரு அணிகளுக்கும் இடையே சமமாகப் பகிர்ந்து கொள்ளப்படவுள்ளன.
இதேவேளை, ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'D' பிரிவில் இடம்பெற்றுள்ள அமெரிக்கா மற்றும் பராகுவே அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணத்தின் நான்காவது லீக் போட்டி இன்று 13.06.2026 லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியானது இலங்கை நேரப்படி இன்று காலை 06.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Annonces
Ajouter
Annuaire